அம்மு அபிராமியின் ஜாக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
ஜாக்கி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
ஜாக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஜாக்கி.
மேலும் இந்தப் படத்தில் காளி, மதுசூதன் ராவ், சரண்யா ரவி, யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஜாக்கி படத்தின் ஒளிப்பதிவை எஸ். என். உதயகுமார் மேற்கொண்டுள்ளார். சக்திபாலாஜி இசையமைத்துள்ளார். பிகே7 ஸ்டுடியோஸ் எல்எல்பி இப்படத்தை தயாரித்துள்ளது.
மதுரையில் நடக்கும் கிடா சண்டையை மையப்படுத்தி ஜாக்கி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற ஜாக்கி திரைப்படம், நாளை(மார்ச் 5) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.
The OTT release date of the film Jackie has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.