அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா பேசுகிறார். சீனிவாச சாஸ்திரி அரங்கம் நிரம்பி வழிகிறது.
தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அ. சிதம்பரநாதன் தமது தலைமை உரையில், "பேராசிரியப் பெருமக்களே! மாணவச் செல்வங்களே! இதுநாள் வரை என் பேச்சு உங்களுக்கு இனித்தது. இன்று இனிக்காது. ஏனெனில் புரட்சியின் சிகரம் அறிஞர் அண்ணாதுரை பேச இருக்கிறார். அவர் பேச்சைக் கேட்டுச் சுவைக்க நீங்கள் எல்லோரும் ஆர்வமாக காத்திருக்கிறீர்கள். நானும் அப்படியே புரட்சியின் சிகரத்தைப் பேச அன்புடன் அழைக்கிறேன்' என்றார்.
அண்ணா பேச்சைத் தொடங்குகிறார், "நண்பர் சிதம்பரநாதன் என்னைச் சிகரம் என்றார். நானோ மனிதனின் சராசரி உயரத்தை விடச் சற்றுக் குள்ளமானவன். அவரைப் பாருங்கள்! எவ்வளவு நெடிய தோற்றம். அவரைச் சிகரம் எனறால் தகும். ஆம் அவர்தான் உண்மையில் புரட்சியின் சிகரம்' என்று அண்ணா மொழிந்தபோது அரங்கம் கையொலியால் அதிர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.