முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி..

""அண்ணே ஒரு வாட்டர் பாட்டில் கொடுங்க! சாயங்காலம் காசு தர்றேன்?''""காலையில கச்சேரியை ஆரம்பிக்கப் போற.. சாயங்காலம் மட்டை ஆயிடுவ, யார்கிட்ட நான் காசு கேட்பேன்''

தினமணி கதிர்

சிரி... சிரி..

""அண்ணே ஒரு வாட்டர் பாட்டில் கொடுங்க! சாயங்காலம் காசு தர்றேன்?''""காலையில கச்சேரியை ஆரம்பிக்கப் போற.. சாயங்காலம் மட்டை ஆயிடுவ, யார்கிட்ட நான் காசு கேட்பேன்''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

""அண்ணே ஒரு வாட்டர் பாட்டில் கொடுங்க! சாயங்காலம் காசு தர்றேன்?''
""காலையில கச்சேரியை ஆரம்பிக்கப் போற.. சாயங்காலம் மட்டை ஆயிடுவ, யார்கிட்ட நான் காசு கேட்பேன்''

-பொ.பாலாஜி, 
அண்ணாமலைநகர்.

""சர்வர் காபி கேட்டேனே''
""இப்பதானே கொடுத்தேன் சார்''
""நான் வெந்நீர்னு நினைச்சு குடிச்சேன். அதுவா காபி''

-பி.கவிதா, 
சிதம்பரம்.

""என்னது! பிறந்த குழந்தை பேசிச்சா! என்னன்னு?''
""தன்னோட ஓ.டி.பி. நம்பர் என்னன்னு கேட்டுது''

-சம்பத்குமாரி, 
பொன்மலை.

""மலிவா பிளாட் இருக்கு பார்க்கிறீங்களா?''
""கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க!''
""அதுவரைக்கும் பிளாட் இருக்காதே!''
""பிளாட் இருக்கிற இடம் ஏரியா, குட்டையா மாறுதான்னு கனமழையைப் பார்த்தா தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்க..''

-அ.சுஹைல் ரஹ்மான், 
திருச்சி.

""டாக்டர்! அந்த பேஷண்ட் இம்ரூமெண்டே இல்லைன்னு கேட்டுகிட்டே இருக்காரு''
""சரி அப்ப அவரை முதல் மாடிலேயிருந்து நாலாவது மாடிக்கு ஷிப்ட் பண்ணிடுங்க!''

-தீபிகா சாரதி, 
சென்னை-5.


""என்னடா சொல்றே! பழனிக்கு மொட்டை போட திருப்பதிக்கு போனீங்களா?''
""ஆமாம். என் தம்பி பழனிக்கு மொட்டை போட போனோம்''

-ச.அரசமதி,
தேனி.

முழு கட்டுரையைப் படிக்க →