முகப்பு
தினமணி கதிர்

கண்டது

""நாங்கள் வாடிக்கையாளர்களைத் தெய்வமாகக் கருதுகிறோம். தெய்வத்துக்கு கடன் கொடுக்கும் தகுதி எங்களுக்கு இல்லை. ஆகவே, தயவு செய்து கடன் சொல்லாதீர்கள்.''

தினமணி கதிர்

கண்டது

""நாங்கள் வாடிக்கையாளர்களைத் தெய்வமாகக் கருதுகிறோம். தெய்வத்துக்கு கடன் கொடுக்கும் தகுதி எங்களுக்கு இல்லை. ஆகவே, தயவு செய்து கடன் சொல்லாதீர்கள்.''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

பேல் பூரி

(திருச்சி மேலகண்டார்கோட்டையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் அறிவிப்பு)

"நாங்கள் வாடிக்கையாளர்களைத் தெய்வமாகக் கருதுகிறோம். தெய்வத்துக்கு கடன் கொடுக்கும் தகுதி எங்களுக்கு இல்லை. ஆகவே, தயவு செய்து கடன் சொல்லாதீர்கள்.''

-சம்பத்குமாரி,
பொன்மலை.

(தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஓர் கிராமத்தின் பெயர்)

"பூவாணம்''

-  ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.

(விருதுநகர் மாவட்டம்- கழுகுமலை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

"மீன்துள்ளி''

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

கேட்டது


(கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வரும் வாடிக்கையாளரும்...)

""அண்ணே...சொந்தக்காரங்க நான்கு பேர் 
வந்திருக்காங்க.. நீங்க ஒத்த இருக்கைக்கு போங்களேன்...''
""இப்ப ஒத்த இருக்கைன்னா!  முதலாளி இருக்கைதான் காலியா இருக்கு.. அதுக்கு  போகட்டுமா ?''

மகேஷ் அப்பாசுவாமி, 
பனங்கொட்டான்விளை.

(திருச்சி மாநகரில் உள்ள கறிக்கடை ஒன்றில்..)

""ஏன் சார் எப்பவுமே நாட்டுக்கோழியே வாங்கறீங்க?''
""எனக்கு "நாட்டு'ப்பற்று அதிகம்ப்பா..!''

-சிவம்,
திருச்சி

(திருநெல்வேலி கே.டி.சி. நகரில் ஒரு தம்பதிக்கிடையே நடந்த உரையாடல் )

""என்னங்க! பையன்தான் கல்யாண வீட்டுக்கு போய் மொய் கவரை கரெக்டா குடுத்துட்டு வந்திருக்கானே!  பிறகு எதுக்கு அவனை திட்டுறீங்க?''
""கவரில் உள்ள பணத்தை எடுத்துட்டு வெறும் கவரை குடுத்துட்டு வந்திருக்கான் உன் புள்ளெ''

-க.சரவணகுமார்,
திருநெல்வேலி. 

யோசிக்கிறாங்கப்பா!


வேலையைத் தேடும்முன் சேலையைத் தேடாதே!

மா. பழனி,  
தருமபுரி.

மைக்ரோ கதை

அப்பா இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் அம்மாவும் இறந்து விட்டார்.  இருக்கும் சொத்து  வீடு ஒன்று மட்டுமே! அதை பாகம் பிரித்துகொள்வதற்காகத் தனது சகோதரர்களால் அழைக்கப்பட்டு ராஜம் ஊருக்கு வந்திருந்தாள். அண்ணன் வீட்டை விட்டு கொடுப்பதாகவும், தம்பி பெயருக்கு வீட்டை எழுதி கொடுத்து விடுவதாகவும் முடிவு எடுத்தார்கள். ராஜத்துக்கு அவள் கேட்கும் தொகையை கொடுப்பதாகவும் சொன்னார்கள்.

ராஜத்தின் பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவரவர்களுக்கு சொந்த வீடுகளும் இருக்கின்றன.  எனவே தனக்கு பிறந்த வீட்டின் சொத்து பங்கு எதுவும் தேவையில்லை என்றாள். எல்லாம் சுமுகமாக முடிந்து ஊருக்கு புறப்பட்டாள் ராஜம்.

அப்போது, " அம்மா'  என்ற குரல் கேட்டு திரும்பினாள். அங்கு இருந்த கன்றுக்குட்டி அவளை அழைத்தது.  அதுவும் அம்மாவை இழந்த கன்று தான். பாசத்துடன் அழைத்து ராஜத்தை பார்த்தது.

ராஜம் தனது பிறந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் அந்த கன்று குட்டியுடன் பரிவாக நடந்து கொள்வாள். இப்போது அந்த கன்றுக்குட்டி தன்னுடன் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதை உணர்ந்தாள்.

அவர்கள் சகோதரர்களிடம் கேட்டு தன் பிறந்த வீட்டு பங்காக, அந்த கன்றுக்குட்டியை பாகப் பிரிவினையாக பெற்று அழைத்து சென்றாள் ராஜம்.
-கு.அருணாசலம், தென்காசி.


எஸ்எம்எஸ்


தன்னம்பிக்கை என்பது எதையும் இழக்கவிடாமல் கூடவே இருப்பது!

-பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.

அப்படீங்களா!

வாடகை டாக்ஸி சேவையில் தொடங்கி,  இணையவழி என தற்போது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவைக்கு பெங்களூரு முன்னேறிவிட்டது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு மூன்று மணி நேர விமானப் பயணத்தில் வந்தடைந்தாலும், கெம்பே கௌடா விமானநிலையத்தில் இருந்து மாநகரத்துக்குள்  சாலை மார்க்கமாக பயணிக்க 3 மணி நேரமாகிவிடும். சுமார் 50 கி.மீ. தூரத்தைக் கடக்க நீண்ட நேரமாவதற்கு போக்குவரத்து நெரிசலே இதற்கு காரணம். 
உலகுக்கே தகவல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் பெங்களூருவுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னையை தீர்க்க இதுவரை வழி கிடைக்கவில்லை.
இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை அக்.10-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்ற தகவல் வந்திருக்கிறது.
"பிளேட் இந்தியா' என்ற தனியார் நிறுவனம் தொடங்கும் இந்தச் சேவையின் மூலம் விமான நிலையத்தில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் விமான நிலையத்தை 12 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம்.
வரிகள் இல்லாமல் ரூ.3,250 என கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது. பெங்களூரு மாநகரின் அழகை ரசித்தப்படியே 5 பேர் வரை இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம். 
சாலைப் போக்குவரத்து பிரச்னைக்கு மாற்று விமான டாக்ஸி பயணம் அனைவருக்கும் வழங்க முடியாது என்றபோதிலும், அவசரத் தேவைக்கு இதைப் பயன்படுத்தலாம். 
இனி பெங்களூரு சென்றால் விமானபயணத்துடன் ஹெலிகாப்டர் பயணத்தையும் மேற்கொள்ளலாம்.

-அ.சர்ப்ராஸ்

முழு கட்டுரையைப் படிக்க →