தினமணி கதிர்

திரைக் கதிர்

மஞ்சிமா மோகனோடு, கெளதம் கார்த்திக் திருமணம் கிட்டதட்ட நிச்சயம் ஆகிவிட்டது.

தினமணி

மஞ்சிமா மோகனோடு, கெளதம் கார்த்திக் திருமணம் கிட்டதட்ட நிச்சயம் ஆகிவிட்டது. பெண் வீட்டில் மற்றும் மணமகன் வீட்டில் இருந்த எதிர்ப்புகளை கொஞ்சமாக சரி செய்து கல்யாணத்திற்கு கெளதம் கார்த்திக் "ஓ கே' வாங்கி விட்டார். இதற்கு கௌதமிற்கு அவரின் அப்பா தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இன்னும் இந்த அறிவிப்புகள் இறுதிக்கட்டத்திற்கு வருகிற வரைக்கும் பதற்றத்தோடு காதல் ஜோடி காத்திருக்கின்றனர். காதல் ஜெயிக்கட்டும்.

"ஜெயிலர்' படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நெல்சனின் வேகமும் ஒர்க்கிங் ஸ்டைலும், ரஜினியை கவர்ந்துவிட, "எக்ஸலன்ட்' என அவரை பாராட்டியிருக்கிறார் ரஜினி. தவிர படப்பிடிப்பு இடைவேளைகளில் நெல்சனிடம் ரஜினி மனம் விட்டு பேசுவதாகவும் சொல்கிறார்கள். சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டால், செம உற்சாகத்தில் இருக்கிறார் நெல்சன்.

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் "விடுதலை' படத்தின் ஷூட்டிங், நிறைவடையும் கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. டிசம்பருக்குள் "விடுதலை' படப்பிடிப்புக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூரி. தவிர, "மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாரன் இயக்கத்திலும் நடிக்கிறார். அவர் சொன்ன கதை சூரிக்கு மிகவும் பிடித்துப் போய்விட, டிசம்பரில் இருந்து கால்ஷீட் தருகிறேன் என சொல்லியிருக்கிறார் சூரி. அதைப் போல அமீர் இயக்கத்தில் சூரி நடிப்பதாக சொல்லப்பட்ட "இறைவன் மிகப்பெரிவன்' படத்தில் சூரி இல்லையாம். 

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படம் "சொப்பன சுந்தரி'. ஐஸ்வர்யா ராஜேஷ்,   லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல்,  கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்ள "லாக்கப்' படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் இயக்கியிருக்கிறார்.

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் "ஆயிஷா'. இந்தப் படத்தின் பாடலுக்கு  பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்தியா மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள். "ஆயிஷா' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.  ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது. இந்த பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT