முகப்பு
தினமணி கதிர்

கர்ப்பத்தைக் கண்டறியும் கடிகாரம்..!

கர்ப்பத்தைக் கண்டறிகிறது கடிகாரம் என்றால் நம்ப முடிகிறதா?  நம்பிதான் ஆக வேண்டும். 

Updated On : 23 அக்டோபர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:08 PM


கர்ப்பத்தைக் கண்டறிகிறது கடிகாரம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும்.

"ஆப்பிள் வாட்ச்'- ஒரு பெண்ணின் மருத்துவப் பரிசோதனைக்கு முன்பே அவர் கர்ப்பமாக இருப்பது குறித்து துல்லியமாகக் கண்டறிந்துள்ளது.

பொதுவாக, ஸ்மார்ட்வாட்சில் பல்வேறு ஆரோக்கிய அம்சங்கள் இருக்கும். ஆனால் அனைத்திலும் ஆப்பிள், மேம்பட்ட அம்சங்களோடு தனித்து காணப்படுகிறது.

Advertisement

ஆப்பிள் வாட்சில் முக்கிய சிறப்பம்சமாக இதய துடிப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கும் இ.சி.ஜி. சென்சார் ஆதரவு இருக்கிறது. அதோடு, ஆக்சிமீட்டர், மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு... என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆப்பிள் வாட்ச் பலரது உயிர்களைக் காப்பாற்றியது என்ற செய்திகள் குறித்து அண்மைக்காலத்தில் வெளிவருகின்றன. அதன்படி, ஒரு பெண்ணிடம் அவரது மருத்துவப் பரிசோதனைக்கு முன்பே அவர் கர்ப்பமாக இருப்பது குறித்து துல்லியமாக கண்டறிந்துள்ளது.

34 வயதான பெண் ஒருவர் ஆப்பிள் வாட்ச் உடனான தனது அனுபவம் குறித்து கூறியதாவது:

எனது ஆப்பிள் வாட்ச் 15 நாள்களுக்கும் மேலாக அதிகரித்த இதயத் துடிப்புக் குறித்து எச்சரித்தது. ஓய்வெடுக்கும் நேரத்தின்போது இதயத்துடிப்பு 57-ஆக இருக்கும். ஆனால் சமீபத்தில் தனது இதயத் துடிப்பு 72 ஆக அதிகரித்தது.

முதலில் கரோனா பரிசோதனை செய்தேன். "நெகட்டிவ்' என முடிவு வந்தது. பின்னர், சளி, காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்தேன். ஆனால் அதிலும் எதுவும் இல்லை என முடிவு வந்திருக்கிறது.

பின்னர், ஏன் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கிறது என சாத்தியமான காரணங்கள் குறித்து ஆன்லைனில் சோதித்தேன். அதில், கர்ப்பக் காலத்தில் பெண்களின் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும் என தெரியவந்தது.

இதனை உறுதிப்படுத்த மருத்துவமனைககுச் சென்று பரிசோதனை செய்தேன். அங்கு நான்கு வாரம் கருவுற்று இருப்பதை அறிந்தேன். கர்ப்பம் ஆரம்பக்கட்டத்தில் இருந்ததால், இது தொடர்பான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

உடலில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வை மிகவும் துல்லியமாகக் கண்டறிந்ததற்காக ஆப்பிள் வாட்சை பாராட்டுகிறேன். ஆப்பிள் வாட்ச் பயனர்கள் அதில் உள்ள இதயத் துடிப்பு அலர்ட்களை அனைவரும் கவனிக்க வேண்டும்'' என்றார்.

செளமியா சுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.