முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

"பத்து தல' படத்தை முடித்துக் கொடுப்பதில் மும்முரமாகிவிட்டார் சிலம்பரசன். தினமும் காலை ஆறு மணிக்கு கேமிராமேன், இயக்குநர் வரும் போதே வந்து நின்று விடுகிறாராம்.

Updated On : 23 அக்டோபர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:08 PM


"பத்து தல' படத்தை முடித்துக் கொடுப்பதில் மும்முரமாகிவிட்டார் சிலம்பரசன். தினமும் காலை ஆறு மணிக்கு கேமிராமேன், இயக்குநர் வரும் போதே வந்து நின்று விடுகிறாராம்.  அடுத்து இரண்டு, மூன்று புதுப்படங்களுக்கு ஏற்பாடுகள், துவக்க விழா நடக்கப் போவதால் உடனே படத்தை முடித்துக் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார். சமீபத்தில் வெற்றி மாறனோடு நடந்த சந்திப்பு அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. விரைவில் இருவரும் இணையும் அறிவிப்பு வெளியாகலாம். 

"வாரிசு' படத்தை முடித்து விட்டு விஜய் தன் குடும்பத்தோடு வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருக்கிறார். முதலில் அமெரிக்கா செல்வதுடன் அங்கே 15 நாள்கள் தங்குகிறார். அதன் பிறகு லண்டன் செல்கிறார். அங்கே அவரின் மாமனார் வீட்டில் இரண்டு வாரங்கள் செலவழிக்கத் திட்டமாம். அதற்குள் இரண்டு மூன்று கதைகளைத் தொடர்ச்சியாக கேட்டு தயாரிப்பாளர்களை முடிவு செய்து விட்டு செல்லப் போகிறார். இதில் மாமனார் வீட்டில் வைத்து அவருக்கும் அப்பா எஸ்.ஏ.சி.க்குமான சமரசம் பேசப்படும் என்று சொல்கிறார்கள். 

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு விழா எடுக்க நடிகர் சங்கம் சார்பில் முயற்சிக்கிறார் விஷால். இன்னும் அந்தச் செய்தி ஸ்டாலின் காதுக்குச் செல்லாமல் உள்ளேயே காய் நகர்த்தி வேலை செய்து வருகிறார்கள்.  ஜனவரியில் ஸ்டாலின் சம்மதித்தால் பெரிய விழாவாக அவருக்கு பாராட்டு விழா நடக்கும் என்று தெரிகிறது. அப்பா மாதிரி விழா பாராட்டு விழாக்களில் அவருக்கு இல்லை என்பதால் விழா நடைபெறுவதும் சந்தேகம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

Advertisement

கோலிவுட்டில் பல நடிகர்களின் காதல் குறித்து தகவல் கிளம்பும் போதெல்லாம் முதலில் மறுப்பார்கள். பின்னர், அந்த தகவலை உறுதி செய்யும் விதத்தில் திருமணம் வரை செல்வார்கள். சினேகா - பிரசன்னாவில் இருந்து இப்போது கெளதம் கார்த்தி - மஞ்சிமா வரை நாம் பார்த்து வரும் காதல்கள்தான். இப்போது புது காதல் ஜோடிகளாக சித்தார்த்- அதிதிராவ் ஜோடியை சொல்கிறார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருக்கிறார்கள் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் கேட்கிறது. 

இன்னும் நாலைந்து படங்களில் நடித்து முடித்த பிறகு நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் பட உலகில் இருந்து விலகி விடாமல் தொடர்ந்து பட தயாரிப்புகளில் ஈடுபட போகிறார். இப்போது அவர், அட்லியின் ஹிந்திப் படமான "ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். அதனால், அவர் தயாரிப்பதாக இருந்த படங்களை தொடங்காமல் தள்ளி வைத்துள்ளார். விரைவில் அவர் தயாரித்துள்ள "கூழாங்கல்' திரைக்கு வர இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.