சிரி...சிரி...
""உன் கணவர் ரொம்ப லோக்கல் ன்னு சொல்றியே?''""ஆமா! ரொம்ப லோக்கலா இறங்கி வந்து திட்டினால் தான் அவருக்கு உறைக்குது!''
தினமணி கதிர்சிரி...சிரி...
""உன் கணவர் ரொம்ப லோக்கல் ன்னு சொல்றியே?''""ஆமா! ரொம்ப லோக்கலா இறங்கி வந்து திட்டினால் தான் அவருக்கு உறைக்குது!''
""உன் கணவர் ரொம்ப லோக்கல் ன்னு சொல்றியே?''
""ஆமா! ரொம்ப லோக்கலா இறங்கி வந்து திட்டினால் தான் அவருக்கு உறைக்குது!''
-கு.அருணாசலம்,
தென்காசி.
""எதிரியிடம் நம் மன்னர் எப்படி சிக்கினார்?''
""புறமுதுகிட்டு ஓடி வரும் போது பயத்தில் திசை தெரியாமல் எதிரி நாட்டுக்குள்ளே ஓடி விட்டார்!''
- ப.சோமசுந்தரம்,
கோவிலம்பாக்கம்.
""இப்படி ரன்னிங்ல ஓடி வந்து ஏறுகிறீயே.. அறிவு இருக்கா?''
"" நல்லா பாருய்யா. நான்தான் டிரைவர். பஸ்ஸை நிறுத்தி டீ குடிச்சிட்டு இருக்கும்போது ஆட்டோமேடிக்கா பஸ் மூவ் ஆயிடுச்சு.''
-க.சரவணகுமார்,
திருநெல்வேலி.
""முறுக்குப் பிழிய மட்டும் உங்க மாப்பிள்ளைய கூப்பிடுறீங்களே! ஏன்?''
""அவர்தாங்க ரொம்ப முறுக்கிக்குவார்!''
- பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.
"என்னங்க. இன்னிக்கு உங்க ராசிக்கு மனைவியால் சந்தோஷமுன்னு பேப்பரில் போட்டிருக்கு..''
""நீ இன்னிக்கு உங்க அம்மா வீட்டுக்கு போற விஷயம் அவங்களுக்கு எப்படி தெரியும்..''
- தீபிகா சாரதி,
சென்னை.
"மாட்டு லோன் வேணுமுன்னு கேட்குறீங்களே... உடனே கட்டுவீங்களா..''
""மேனேஜர் சார். பேங்கில மாடு வாங்கின உடனே கட்டிடுறேன்..''
-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.