முகப்பு
தினமணி கதிர்

சிரி...சிரி...

""என்னம்மா... மெது வடை  சிவப்பு கலர்ல இருக்கு?''""மருதாணி வைச்சிருந்த கையோட போட்டுட்டேங்க!''

தினமணி கதிர்

சிரி...சிரி...

""என்னம்மா... மெது வடை  சிவப்பு கலர்ல இருக்கு?''""மருதாணி வைச்சிருந்த கையோட போட்டுட்டேங்க!''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

""என்னம்மா... மெது வடை  சிவப்பு கலர்ல இருக்கு?''
""மருதாணி வைச்சிருந்த கையோட போட்டுட்டேங்க!''

-ப.சோமசுந்தரம்,
சென்னை.

""போலீஸ  பாத்து ஏன் ஒளியற...ஏதும் தப்பு தண்டா பண்ணிட்டியா...?''
""திருட்டு தொழில விட்டு நாலு வருசமாச்சு.. ஆனா இன்னும் மாமூல் கேக்கறாங்க...''

-அ.செந்தில்குமார்,
சூலூர்.

""எனக்கு ஒரு "கடி ஜோக்' தெரியும்டா''
""சொல்லு... பார்ப்போம்..''
""சொன்னா.. கேட்கத்தான் முடியும். பார்க்க முடியாதுப்பா..''

-வி.ரேவதி,
தஞ்சாவூர்.

""மாமா.. உங்க பொண்ணு கடுங்கோபக்காரியா இருக்கா! அவ கூட நான் எப்படி குடும்பம் நடத்துறது?''
""மாப்ளே.. அவ அம்மா கூட நான் குடும்பம் நடத்துற மாதிரி நடத்துங்க!''

-கு.அருணாசலம்,
தென்காசி.

""மிருகங்களில் பொய் பேசறது எது தெரியுமா?''
""கரடிதான்! அதனால்தான் சும்மா கரடிவிடாதேன்னு சொல்றது வழக்கம்''

-ஆர்.யோகமித்ரா,
சென்னை.

""மன்னா.. இளவரசர் தந்திரம் மிகுந்தவர்..''
""எப்படி சொல்றீங்க.. தளபதியாரே..''
""மந்திரிகளை அடுத்த மன்னர் என்று சொல்ல வைத்துவிட்டாரே..''

-பி.கவிதா,
சிதம்பரம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →