தினமணி கதிர்

மைக்ரோ கதை

கோயில் யானை ஒன்று குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்தது.

DIN

கோயில் யானை ஒன்று குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது, எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி தனது வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று வழிவிட்டது.

அந்தப் பன்றி எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், " பார்த்தாயா? அந்த யானை என்னைப் பார்த்து பயந்துவிட்டது..'' என்றது. 

இதையறிந்து கோயில் யானையிடம் மற்றொரு யானை கேட்டது. அதற்கு கோயில் யானை, "நான் இடறிவிட்டால் பன்றி நசுங்கிவிடும். நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகிவிடுவேன். இதனால்தான் ஒதுங்கினேன்'' என்றது.

தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT