சித்தரிக்கப்பட்டது 
தினமணி கதிர்

சிரி... சிரி...

'இனிமே கிளினிக் பக்கமே வரக் கூடாதுன்னு டாக்டர் திட்டினாரா?' 'ஆமாம். நலம் விசாரிக்க எல்லாம் வரக் கூடாதாம்...'

DIN

'இனிமே கிளினிக் பக்கமே வரக் கூடாதுன்னு டாக்டர் திட்டினாரா?'

'ஆமாம். நலம் விசாரிக்க எல்லாம் வரக் கூடாதாம்...'



'டாக்டர்...நோயாளிங்க வரலைன்னா என்ன செய்வீங்க?'

'வேறென்ன? நோயாளிங்க வீட்டுக்கு கிளம்பிடுவேன்...'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'உடம்பு குணமாகணும்னா நீங்க ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்கணும்...'

'ஆபிஸில் ஓய்வில் இருக்கலாம். வீட்டில் எப்படி இருக்க முடியும் டாக்டர்...'



'தூக்கத்தில் நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே.. ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா?'

'ஓ.. இப்போதெல்லாம் தூக்கத்திலேயே சைக்கிள் ஓட்டுறேன் டாக்டர்...'



'அந்த டாக்டர்கிட்ட ரொம்ப நேரமாப் பேசிகிட்டே இருந்தியே? வியாதியைப் பற்றியா?'

'ம்கூம்.. அடுத்த முறை வரும்போதாவது பீஸ் கொடுங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டிக்கிட்டிருந்தார்...'

-கே.ராமநாதன், மதுரை.



'பைபாஸ் சர்ஜரி பண்ணியே ஆகணுமா.. டாக்டர்...'

'லேட்டஸ்டா பிளை ஓவர் ட்ரீட்மென்ட் ஒண்ணு வந்திருக்கு.. பண்ணாலாமா'



'சிஸ்டர்.. ஆபரேஷனை டாக்டர் மாத்தி பண்ணிட்டார்..'

'அப்படியா... 'ஆல்ட்டரேஷன் வார்டு'ல வெயிட் பண்ணுங்க...'



'சிஸ்டர்.. டாக்டர் ஏன் எழுந்து நடக்க ஆரம்பிச்சுட்டாரு...?'

'அப்போதானே மருந்து பெயர் ஞாபகத்துக்கு வரும்...'

-அ.ரியாஸ், சேலம்.

'இந்த மருந்தைச் சாப்பிடும்போது நீங்கக் குடிக்கக் கூடாது..'

'குடிக்காம மருந்தைக் கடிச்சா டாக்டர் சாப்பிட முடியும்?'



'டாக்டர்.. வயதானா எல்லாம் மறந்து போயிடுமா?'

'ஆமாம்.. உங்க வயசென்ன?'

'அதுவே மறந்துப் போச்சு டாக்டர்...'

-வி.சாரதி டேச்சு, சென்னை.



'குளிர் ஜூரம் வந்து அட்மிட் ஆனவரு.. நர்ஸூகிட்ட கடலை போட ஆரம்பிச்சிட்டாரே..?'

'குளிர்விட்டு போயிருக்கும்...'



'இந்த மூட்டு வலிக்கு நிரந்தரமா ஒரு சொல்யூஷனே கிடையாதா டாக்டர்...'

'ஏன் கிடையாது.. நான் தர்ற இந்த சொல்யூஷனை மூணு மாதம் தடவிட்டா மூட்டுவலி போன இடம் தெரியாது...'



'படுத்தா தூக்கமே வர்ற மாட்டேங்குது டாக்டர்...'

'அப்படியா ஏன்..'

'ஆபிஸ்ல கூட உட்கார்ந்துகிட்டேதான் தூங்கறேன்...'



'நேத்து பிரெட் சாப்பிடலாமுன்னு சொன்னீங்க? இன்னிக்கு சாப்பிட வேண்டாமுன்னு சொல்றீங்க?'

'ஆஸ்பத்திரி கேண்டீனில் நேத்து நிறைய ஸ்டார் இருந்தது.. அதான்...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

அக்.5-இல் ராணிப்பேட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்: ஆட்சியா் அறிவிப்பு

SCROLL FOR NEXT