எந்த ஏரியாவுல கொலை செஞ்சியோ அந்த ஏரியாவில் இருக்கிற நீதிமன்றத்தில்தான் ஆஜராகணும்..''
'எந்த ஏரியாவில் நடந்த கொலைக்கு என்னை போலீஸ் தேடுதுன்னு தெரியலை எஜமான்...''
'கொலையாளியை எப்படி கொலை செஞ்சேன்னு நடித்துக் காட்ட சொன்னது தப்பா போச்சு..''
'ஏன் என்னாச்சு...''
'சோஷியல் மீடியாவில் லைவ் போடுன்னு சொல்றான்...''
அரசு, புதுச்சேரி.
'இந்த ஏரியாவில் திருட்டு பயம் அதிகமா?''
'ஆமாம்.. நிறைய அடகுக்கடைகள் இருக்கே...''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'திருடப் போன இடத்தில் இந்த அம்மாகிட்ட தப்பா நடக்க முயன்றியா?''
'இல்லை எஜமான்.. இடுப்பில் தொங்கின சாவிக் கொத்தை எடுக்க ட்ரை பண்ணேன்..''
'உங்கக் கதையைத் திருடி ஒருத்தன் படம் பண்ணிட்டான். ஏன் கேஸ் கொடுக்க மாட்டேன் சொல்றீங்க?''
'அந்தப் படம் அட்டர் ஃபிளாப்.. அதான்...''
'ரெடிமேட் கடை ஷட்டரை எதுக்கு உடைச்சே..?''
'மங்கி குல்லா எடுத்து போட்டுக்கிட்டு நகைக்கடையை கொள்ளையடிக்கதான் சார்..''
அ.ரியாஸ், சேலம்.
'ஏன் ஸ்கூட்டரை திருடினே..?''
'டிராபிக் போலீஸ்காரர்தான் சீக்கிரமா வண்டியை எடுன்னு பலமுறை சொன்னாருங்க.. ஐயா..''
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
'போன முறை கோர்ட்டுக்கு வந்தப்போ, இனிமே திருட மாட்டேன்னு சொன்னியே...?''
'என் மனைவி இன்னும் திருந்தலை எஜமான், தொழிலுக்கு கிளம்புன்னு நச்சரிக்கா...?''
-பர்வீன் யூனூஸ், சென்னை.
'என்கிட்டே அவன் ரொம்ப துள்ளினான். அதான் அவனைத் தாக்கினேன்...''
'ஓ.. துள்ளிய தாக்குதலுன்னு சொல்லு...''
'நாட்டில் வன்முறை பெருகிடிச்சா எப்படி?''
'முன்னாடி பஸ்ஸில் இடம்பிடிக்கிறவங்க ஜன்னல் வழியா துண்டைப் போடுவாங்க? இப்போ கத்தி, கடப்பாரைன்னு போடுறாங்க ஐயா?''
'மனைவி காணாமல் போனான்னு நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிடறேன் சார்..''
'உங்க மனைவி வீட்டுக்கு வந்துட்டாங்களா?''
'இல்லை சார்.. இதுவே எனக்கு நிம்மதியா இருக்கு...''
வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.