இப்படியும் வேட்பாளரா!
பணமின்றி மக்கள் நிதி திரட்டி வெற்றி பெற்ற கெனி பென்!
தேர்தல் என்றாலே வேட்பாளர்களுக்குச் செலவோ செலவுதான்.
சுவரொட்டிகள், பிரச்சார மேடைகள், வாகனங்கள்... வேட்பாளருக்காக உழைக்கும் தொண்டர்களின் சாப்பாட்டு செலவு, போக்குவரத்து செலவு.. சைக்கிள் பேரணி - வாகனத்தில் வேட்பாளர் செல்லும் போது, அவரைத் தொடர்ந்து வாகனங்கள் செல்லும் செலவு - இவை தவிர வாக்காளர்களுக்கு ரகசியமாக தரப்படும் அன்பளிப்புகள், பண நோட்டுகள் விநியோகம் என்று சில கோடிகளைத் தொட்டுவிடும். கையிலிருந்தும், கட்சி தரும் பணம் இவற்றை வைத்துதான் ஒரு வேட்பாளர் தேர்தலைச் சந்திக்கிறார்.
கையில் பணம் இல்லாததால், 'சரி பொது மக்களிடமே தேர்தல் நிதியை வசூலித்து தேர்தலுக்காகச் செலவு செய்வோம்' என்று கெனி பென் களத்தில் இறங்கி வெற்றியும் பெ ற்றிருக்கிறார்.
'21- ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு வேட்பாளரா' என்று ஆச்சரியப்பட வை த்திருக்கிறார்.
குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம். பா.ஜ.க.வின் கோட்டை. 2014, 2019 நாடாளுமன்ற தே ர்தல்களில் குஜராத்தில் மொத்தம் 26 தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது. 2024 தேர்தலிலும் அனைத்து 26 தொகுதிகளில் மூன்றாவது தடவையாக வெ ற்றி பெற்று 'ஹாட்ட்ரிக்' அடிக்க பாஜக கடுமையாக உழைத்தது. ஆனால் பாஜகவின் கனவு நனவாகவில்லை. காரணம் கெனி பென். யாரும் நினைத்துப் பார்க்காத சூழலில் கெனி பென் தனி ஒருவராக வெ ற்றி பெற்றார்.
'கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால், தேர்தல் செலவுகளுக்குப் பணம் தர கட்சியினால் இயலாது என்று காங்கிரஸ் கை விரித்ததும் , 'ஐயோ ... பணம் இல்லாமல் தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பது...' என்று திடுக்கிட்டுப் போனார். ' நிலைமையை விளக்கி பனஸ்கந்தா' தொகுதி மக்களிடமே தேர்தல் நிதி வசூலிக்கிறேன்...' என்று சுமார் 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கெனி பென் தனது தேர்தல் செலவுகளை செய்தார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ரேகா பென் செளத்ரியை விட 30, 406 அதிக வாக்குகள் பெற்று வெற்றி கனியைக் பறித்தார், காங்கிரஸ் கட்சி சார்பில் 'பனஸ்கந்தா' தொகுதியில் போட்டியிட்ட கெனி பென், குஜராத்தில் 26 தொகுதிகளையும் மூன்றாவது முறையாக கைப்பற்ற வேண்டும் என்ற பா.ஜ.க.வின் கனவு கனவாகவே இருந்து விட்டது.
கெனி பென் தாக்கூருக்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட அனுபவம் உள்ளது. 49 வயதாகும் கெனி பென் இளங்கலை பட்டதாரி . 2017, 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
'என் தேர்தல் செலவுகளுக்காக நிதியும் தந்து ... போட்டியில் நான் வெற்றி பெறுவதற்காக வாக்குகளையும் வழங்கிய பனஸ்கந்தா தொகுதி மக்களுக்காக அயராது உழைப்பேன்..' என்கிறார் கெனி பென்.