முகப்பு
தினமணி கதிர்

திரைக் கதிர்

சமூக வலைதளங்களில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் ரோட்டோர உணவக வீடியோ

தினமணி கதிர்

திரைக் கதிர்

சமூக வலைதளங்களில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் ரோட்டோர உணவக வீடியோ

Updated On : 22 ஜூன், 2024 at 6:29 PM
பகிர்:

ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி, ஹிந்தியில் "பேபி ஜான்' என பிசியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா பிரபலங்கள் என்றால் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது, அங்கு சாப்பிடுவதுதான் வழக்கம். சிலர், அதற்கு மாறாக இருப்பதும் உண்டு.

அதில் ஒருவராக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் சென்னையில் இரவு நேரத்தில் ரோட்டோர உணவகத்தில் மக்களுடன் நின்று சாப்பிடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்துகளைக் பதிவிட்டு வருகின்றனர்.

-------------------------------------------------------------------------------------------------

கடந்த வருடம் நவம்பர் 6 - ஆம் தேதி ஜகத் தேசாய் என்பவரை அமலாபால் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது நடிகை அமலா பால் - ஜகத் தேசாய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஜூன் 11ஆம் தேதி குழந்தை பிறந்தது என்றும் இருவரும் தங்களுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளனர். தங்களின் குழந்தைக்கு இலை என பெயர் வைத்துள்ளனர். இதுதொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அமலா பால்- ஜகத் தேசாய் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-------------------------------------------------------------------------------------------------

போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பை தற்போது மாற்றியிருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு முதலில் "ம.பொ.சி' எனப் பெயரிட்டிருந்தார்கள். தற்போது "சார்' என்று மாற்றியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சமயத்தில் ம.பொ.சி-யின் பேத்தியும் எழுத்தாளருமான பரமேசுவரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை... அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதை இல்லையென்று சொல்லலாமா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?" எனப் பதிவிட்டிருந்தது சர்ச்சையாகப் பேசப்பட்டது.

-------------------------------------------------------------------------------------------------

தனுஷின் 50-வது திரைப்படமான "ராயன்' ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது எனத் தொடர்ந்து நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வந்தது. தற்போது ரிலீஸ் குறித்தான அறிவிப்பை படக்குழுவே அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது. அடுத்த மாதம் 26-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது. ஜூலை 28... நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதன் ஸ்பெஷலாக படத்தை ஜூலை 26-ஆம் திரைக்கு எடுத்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →