'ஏம்பா ராப்பிச்சை.. நான்தானே உனக்கு சாப்பாடு போட்டேன்.. ஆனா என் கணவருக்கு நன்றி சொல்றே..?'
'சமையல் அவர்தானே தாயி செஞ்சது...?'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'நான் என் பெண்டாட்டிக்கு பயப்படுவேன்.. நீங்க?'
'நான் ஏன் சார் உங்க பெண்டாட்டிக்கு பயப்படணும்..?'
-நா.நாகராஜன், ஊரப்பாக்கம்.
'நான் வீட்டுக்காரிக்கு பயப்படுவேன்.. நீங்க?'
'அட போங்க சார்.. நான் சொந்த வீட்டில்தான் இருக்கேன்..?'
'என் மனைவி புடவைக் கடைக்கு போனா, சாப்பாட்டையே மறந்துடுவா?'
'என் மனைவி புடவைக் கடைக்குப் போகும்போது, கையில் சாப்பாடு கட்டின்னு போயிடுவா?'
'நீதான் டாக்டராச்சே.. அப்புறம் ஏன் உன் கணவர் ஜூரத்துக்கு வேறு டாக்டரிடம் போறாரு?'
'என் பக்கத்துல இருந்தா, அவரு தெர்மா மீட்டர் வைத்து பார்க்கக் கூட வாய் திறக்க மாட்டாரே..?'
-வி.சாரதி டேச்சு, சென்னை.
'சார்.. பீரோவில் இருந்த ஐநூறு புடவைகளையும் காணவில்லை...?'
'ஏம்மா.. உங்களுக்கு யார் மேல சந்தேகம்...?'
'என் புருஷன் மீதுதான் சார்.. துவைக்க கஷ்டமா இருக்குன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு?'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'புகுந்த வீட்டுக்கு வரும்போது உன் அம்மா, உன் காதுல ஏதோ கிசுகிசுத்தாங்களே.. என்ன சொன்னாங்க?'
'சமையலில் ஏதும் சந்தேகம் இருந்தா மாப்பிள்ளையைக் கேட்டு தெரிஞ்சுக்கோங்கோன்னு சொன்னாங்க?'
-எம்.பி.தினேஷ், கோவை- 25.
'எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்து, இன்றோடு ஏழு வருஷம் முடியுது..?'
'வெறுமனே சொன்னா எப்படி? ட்ரீட் எங்கே?'
'அடப்பாவி.. ஏழு வருஷமா பெண்டாட்டியே பிரிஞ்சி தனியா இருக்கறதுக்கு ட்ரீட் வேறயா?'
'குடும்பப் பிரச்னைகள் தவிர்க்க 100 வழிகள் என்று நூல் வெளியிட்டீங்களே.. நீங்களே மனைவியை பிரிஞ்சி இருக்கீங்களே?'
'அந்த நூறு வழிகளில் இதுவும் ஒரு தலையாய வழிங்க சார்...'
'தப்பை உன் மேல வைச்சிட்டு பெண்டாட்டி அடிக்கிறான்னு சொல்றீயே..?'
'என் மீது என்ன சார் தப்பு...?'
'கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான்...'
'உன் பேரை 'சாந்தா'ன்னு கூப்பிடாம 'சந்தா'ன்னு உன் புருஷன் கூப்பிடுறாரே! ஏன்?'
'மாசமாசம் எனக்காக நிறைய பணம் செலவழிக்கிறாராம். அதான் அப்படி சொல்றாரு?'
'எனக்கு பிடிக்காததை என் மனைவியும், என் மனைவிக்கு பிடிக்காத வேலையை நானும் செய்துடுவோம்..?'
'வெரிகுட்.. நீங்க என்ன வேலை செய்வீங்க.. உங்க மனைவி என்ன செய்வாங்க?'
'எனக்கு சீரியல் பார்க்கப் பிடிக்காது.. அவங்களுக்கு வீட்டில் வேலை செய்ய பிடிக்காது...?'
'உங்க வீட்டுக்காரர் பெயர் 'இன்னாரப்பாவா? புதுசா இருக்கே...'
'எங்க மாமியார்தான் இன்னார் அப்பான்னு சொல்ல சொன்னாங்க..?'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.