கருவேப்பிலை 
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எளிய மருத்துவக் குறிப்புகள்...

என் வயதான பெற்றோர் சிறுவயது முதலே வீட்டிலும் தோட்டத்திலும் உள்ள உணவு, மூலிகைச் செடிகளைக் கொண்டு வைத்தியம் செய்து, பல உடல் உபாதைகளைக் குணப்படுத்திக் கொண்டனர்.

DIN

என் வயதான பெற்றோர் சிறுவயது முதலே வீட்டிலும் தோட்டத்திலும் உள்ள உணவு, மூலிகைச் செடிகளைக் கொண்டு வைத்தியம் செய்து, பல உடல் உபாதைகளைக் குணப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் சில எளிய வீட்டுக் குறிப்புகளைக் கூறி, உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் வகையில் சொன்னால், அவர்கள் என் குடும்பத்துக்குப் பயன்படுத்துவார்கள். ஆயுர்வேதக் குறிப்புகள் சில கூறவும்.

-தண்டபாணி, குடவாசல்.

கருந்துளசி, சுக்கு, சீரகம், வகைக்கு ஐந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து காய்ச்சி, ஐநூறு மில்லியாக வற்றியதும் வடிகட்டி,ஒருநாளில் பல தடவை சிறிது, சிறிதாகக் குடித்தால், மூக்கடைப்பு (சளியால்) உபாதை நீங்கிவிடும்.

அதுபோலவே, மூக்கடைப்பு நீங்க, எலுமிச்சம்பழச் சாறு முப்பது மில்லி, தேன் ஐந்து மில்லி சேர்த்து காலை உணவுக்கு அரை மணி முன் சாப்பிட நல்லது. தும்மல், மூக்கிலிருந்து நீராக வடியும் நிலையில், விராளி மஞ்சளைச் சுட்டு, அதிலிருந்து வரும் புகையை முகர்வதால் விரைவில் உபாதையானது குணமாகிவிடும்.

ராஸனாதி சூரணம், ஏலாதி சூரணம், கச்சோராதி சூரணம் போன்றவற்றில் ஒன்றை உச்சந்தலையில் தேய்த்துக் கொண்டாலும், தும்மல், மூக்கடைப்பு உபாதைகள் தீரும்.

அஜீரணம் ஏற்பட்டுள்ள நிலையில் இஞ்சி சாறு பதினைந்து மில்லி எடுத்து மூன்று சிட்டிகை வெல்லம் கலந்து, ஒருநாளில் இருவேளை சாப்பிட அஜீரணம் மாறி, பசி நன்றாக எடுக்கும். செரிக்காமல் வயிற்றில் கிடக்கும் உணவும் விரைவில் செரித்துவிடும்.

இருபது கறிவேப்பிலையை இருநூறு மில்லி தண்ணீரில் கலந்து நூறு மில்லியாகக் காய்ச்சி, வடிகட்டிக் குடித்து, செரிமானக் கோளாறுகள் நீங்கும். ஐந்து கிராம் ஓமம், இருநூறு மில்லி தண்ணீருடன் காய்ச்சி, நூறு மில்லியாக வற்றியதுடன் இளஞ்சூடாகப் பருக வயிற்றிலுள்ள மப்புநிலை குணமாகிவிடும்.

வயிற்றில் எரிச்சல், வாயுத் தொல்லை, குமட்டல், உண்டவுடன் வயிறு நிரம்பிய நிலையில் மாற, பதினைந்து மில்லி இஞ்சி சாறுடன் ஐந்து மில்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து, சிறிது சிறிதாகச் சாப்பிட உகந்தது. அதுபோல, இருபது கருவேப்பிலை இலைகளை, சிறிது மோர்விட்டு மைய அரைத்துக் குடிக்கவும்.

வாந்தியை நிறுத்த, நெல்பொறி இருபது கிராம், சுக்கு, தனியா, திப்பிலி வகைக்கு இரண்டு கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, இருநூற்றி ஐம்பது மில்லியாகக் குறுகியதும் வடிகட்டி சிறிது இந்துப்பு கலந்து, காலை உணவாகச் சாப்பிட மிகவும் நல்லது.

ஐந்து கிராம் சுக்கை இடித்து, இருநூறு மில்லி லிட்டர் தண்ணீரில் காய்ச்சி நூறு மில்லியாக வற்றியதும் வடிகட்டிக் குடிப்பதும் வாந்தியை நிறுத்த உதவும். வில்வாதி லேஹியம் சாப்பிடலாம்.

ஐந்து கிராம் நன்கு பொடித்த ஜாதிக்காயை பத்து மில்லி தேனுடன் குழைத்து காலை, இரவு உணவுக்கு அரை மணி முன் சாப்பிட, பேதி நின்றுவிடும். பத்து கிராம் மாதுளம் பழத்தோலை இடித்துப் பொடியாக்கி, நூறு மில்லி மோருடன் கலந்து பருக, பேதி நின்றுவிடும். அதுபோலவே ஐந்து கிராம் சுக்குப் பொடியையும் மோருடன் கலந்து சாப்பிடலாம். தாடிமாஷ்டகம் எனும் பொடி மருந்து தேன், மோரூடன் கலந்து சாப்பிடலாம்.

குடல் புழுக்கள்அழிய, கருவேப்பிலை, முருங்கை ஈர்க்கை, இரவு வென்னீரில் ஊறவைத்து, மறுநாள் காலை உணவுக்கு முன் குடிக்கலாம். வாயு விடங்கம் எனும் சூரண மருந்தை வென்னீருடன் அருந்தலாம். குப்பைமேனி இலைச்சாறைப் பருகலாம். கிருமிக்னவடி எனும் ஆயுர்வேத மருந்தை சூடான ஓமத் தண்ணீருடன் இரவு படுக்கும் முன் ஒரு மாத்திரை சாப்பிடலாம்.

முள்ளங்கி சாறுடன் தேங்காய் அரைத்து எலி கடித்த இடத்தில் பூசலாம். சுக்கு, மிளகு, வேப்பம்கொட்டை வகைக்கு ஐந்து கிராம் பொடித்து சிட்டிகை இந்துப்புடன் சாப்பிட எலி கடித்த விஷம் இறங்கும். வில்வாதி குளிகையை உள்ளும் புறமும் பயன்படுத்தலாம்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT