என் படத்துல ஒரு அரசியல்வாதியை நடிக்க வைச்சது ரொம்ப நல்லதா போச்சு..
'என்ன செய்தார்...?''
'லாரி, லாரியா ஆள்களைக் கூட்டிட்டு வந்து படம் பார்க்க வைக்கிறார்...''
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.
'நீ திட்டலேன்னு சொல்றே.. டி.வி.யில் சீரியலும் ஓடலை.. உன் மனைவி அழுதுகிட்டிருக்காங்களே...''
'நேத்து அவ பார்க்காமல் விட்டுபோன சீரியலோட கதையைச் சொன்னேன்.. அதான்...''
'அந்தப் புதுப் படத்துக்குப் போயிட்டு எப்படா இன்டர்வெல் விடுவாங்கன்னு ஆயிடுச்சி...''
'ஏன் அவ்வளவு போரா...?''
'இல்லே.. பாப்கார்ன் வாங்கிக் கொடுங்க டாடின்னு பையன் உயிரை எடுத்துட்டான்...''
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'உங்க ஐயாவுக்கு மிகவும் பிடித்தது அந்த கால படம்- பாவ மன்னிப்பு.. ஏன்..?''
'அதில்தானே நாகையா, சுப்பையா, பாலையா என மூன்று ஐயாக்கள் நடிச்சிருக்காங்க?''
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'அந்த பேஷன்ட் ரஜினி ரசிகர் போல...?''
'எப்படி சொல்றே..''
'நான் ஊசி போட்டவுடன் "என் வலி தனி வலி'ன்னு சொல்றாரு..?''
'டாக்டர்.. என் மனைவி ஓவரா டி.வி. பார்க்கிறாரா...?''
'எந்த அளவுக்குப் பார்க்கிறாங்க?''
'கரண்ட் கட்டானாலும் டார்ச் அடிச்சி பார்க்கிற அளவுக்கு...?''
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
'இதுல யாரு டைரக்டரு...?''
'டைரக்டர் இவர்தான். ஆனா படத்தோட கதை இவரோடது இல்லை...?''
'ஹீரோ மீது தயாரிப்பாளருக்கு கோபம் ஏன்?''
'பழைய படத்தை ரீ ரிலீஸ் பண்ணதுக்கு சம்பளம் கேட்டாராம்...''
'புதுப் படத்தைப் பார்த்துட்டு ஏன் அதிர்ச்சி அடைஞ்சிட்டீங்க?''
'இதே கதையைச் சொல்லி நேத்து ஒரு டைரக்டரு சொல்லி அட்வான்ஸ் வாங்கிட்டாரு...?''
-அ.ரியாஸ், சேலம்.
'வயிரும் வாயும் படத்தோட டைரக்டர் அதே நடிகர், நடிகைகளை வச்சி படம் எடுக்கிறாராம்...''
' அதுக்கு என்ன டைட்டில்...?''
'தாயும் சேயும்...''
'அரைத்த மாவு என்கிற கதை ஏற்கெனவே வந்துடிச்சி சார்...''
'அப்போ.. அரைத்த மாவு-2-ன்னு டைட்டிலை மாத்து...''
'டி.வி.யும் இப்போ சினிமா மாதிரி ஆச்சா...?''
'முன்பெல்லாம் சினிமா நடிகைகள்தான் கனவில் வருவாங்க.. இப்போ டி.வி. நடிகைகள் கூட வர ஆரம்பிச்சுட்டாங்க?''
'ஐநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு அந்தப் படத்தை நின்னுக்கிட்டே பார்த்தேன்...?''
'ஏன் சார் அவ்வளவு கூட்டமா?''
'இல்லை. படம் உட்கார்ந்து பார்க்கிற மாதிரியே இல்லையே...?''
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.