தினமணி கதிர்

துளி.. துளியாய்...

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நானூறுக்கும் மேற்பட்டோர் முகம் அறியாமலேயே இணைய வழியில் ஒன்றிணைந்து, 'துளி' இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திச் சேவை

பெ.பெரியார்மன்னன்

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நானூறுக்கும் மேற்பட்டோர் முகம் அறியாமலேயே இணைய வழியில் ஒன்றிணைந்து, 'துளி' இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் மாதம்தோறும் பங்களிப்பை வழங்கி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி, கல்லுôரியில் படிக்கும் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்களுக்கு அறிவுசார் கல்விச் சேவையாற்றி வருகின்றனர்.

இந்தக் குழுவைத் தொடங்கி 5 ஆண்டுகளாக நடத்திவரும் வாழப்பாடியை அடுத்த பேளூரைச் சேர்ந்த ஆசிரியர் ராஜசேகரனிடம் பேசியபோது:

'ஒற்றை இலக்கத் தன்னார்வ உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த 'துளி' இயக்கத்தில், தற்போது இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரிவோர், ஆசிரியர்கள், அரசு - தனியார் நிறுவன ஊழியர்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இவர்கள் மாதம்தோறும் குறைந்தபட்சமாக ரூ.100 பங்களிப்புத் தொகையை குழுவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி விடுகின்றனர்.

இந்தத் தொகையைக் கொண்டு அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள். மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்கு, அறிவுசார் கல்வி, உடல் நலம் சார்ந்த பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

கரோனா காலத்தில் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு தேநீர், முகக்கவசம் ஆகியவையும், ஆதரவற்றோர், மனநிலை பாதித்தோர், சாலையோர முதியோர்களுக்கு போர்வை, உணவுளும் வழங்கப்பட்டன.

கடந்த 3 ஆண்டுகளாக வாழப்பாடி தியாகராஜர் பள்ளி வளாகத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியை 'துளி' அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த முகாமில் பயிற்சி பெற்ற 8 பேர் அரசுப் பணிக்குச் சென்றுள்ளனர்.

பேளூரில் கிராமப்புற மாணவர்களுக்கு கட்டணமின்றி, சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சியும், தடகள விளையாட்டு பயிற்சியையும் அளிக்கிறோம்.

கடந்த ஆண்டு கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யும் நோக்கில் 'ஆரி' தையற்கலை பயிற்சி அளித்தது. பிற தன்னார்வ இயக்கங்களுடன் இணைந்து, வாழப்பாடி அங்கன்வாடி மையம், புதுப்பாளையம் துவக்கப் பள்ளிக்கு கழிவறைகளை அமைத்துள்ளோம்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் படியிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு, ஆண்டு தோறும் சீருடைகளை வழங்குகிறோம்' என்கிறார் ராஜசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT