தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

1990 - கால கட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சில நட்சத்திரங்கள் கோவாவில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பிற்காக இணைந்தது, ஒரு துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்துள்ளது.

டெல்டா அசோக்

கோவாவில் நட்சத்திரங்களின் ரீ யூனியன்!

1990 - கால கட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சில நட்சத்திரங்கள் கோவாவில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பிற்காக இணைந்தது, ஒரு துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் முதல் பல நடிகர்கள் வரை இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பு சிரிப்பு, நினைவுகள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களுடன் ஒரு மாயாஜாலமாக இருந்தது. நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விருந்தினர் பட்டியலில், மூத்த இயக்குநர்களான கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் நடன இயக்குநரும் இயக்குநருமான பிரபு தேவா ஆகியோர் அடங்குவர்.

மேலும் பிரபல நடிகர்களான ஜெகபதி பாபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன், 1990 - களில் வெள்ளித்திரையை ஆண்ட முன்னணி நாயகிகளான மீனா, சிம்ரன்,

சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் இணைந்தனர். கடற்கரை சந்திப்புகள் முதல் பொன்னான திரைப்பட நினைவுகளை மீண்டும் அசைபோடுவது வரை, இந்த குழுவினர் பல கால நட்பையும், சினிமா பாரம்பரியத்தையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தென்னிந்திய சினிமாவை வடிவமைத்த ஒரு மறக்க முடியாத சகாப்தத்திற்கு இந்தச் சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியானதாக அமைந்தது. திரையிலும், திரைக்கு வெளியேயும் உருவான உறவுகளை அனைவரும் போற்றி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வின் புகைப்படங்களும் விடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் கோவாவில் மீண்டும் ஒன்றிணைந்து, புன்னகைகளையும், கதைகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதைக் கண்டு ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பஹத்

எனக்குப் பிடித்த படங்கள் - பஹத்!

இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் படம் 'மாரீசன்'.

நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் வந்து, அங்கிருந்து கோவைக்கு பஹத், வடிவேலு இருவரும் பைக்கில் பயணமாவதுதான் கதை. திருடனாக இருக்கும் பகத், வடிவேலுவிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க அவருடனே செல்ல நேரிடுகிறது.

அடிக்கடி எல்லாவற்றையும் மறந்து விடும் வடிவேலுவுடன் பஹத் மாட்டிக்கொண்டு எப்படியெல்லாம் தவிக்கிறார். இருவருக்குமிடையே என்னவெல்லாம் நடக்கிறது. இந்தப் பயணம் இருவரின் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.

இது குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் தனக்கு பிடித்த படங்கள் குறித்து பேசியிருக்கிறார் பஹத். அதில் தான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் ரஜினியின் 'பாட்ஷா' என்று சிலாகித்துப் பேசியிருந்தார். இதையடுத்து தனக்குப் பிடித்த டாப் 5 படங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையையும், காதலையும் சொல்லும் அமிதாப் பச்சனின் 'மிலி', ஸ்ரீதேவி - ரஜினியின் காதல், பெண்ணால் திருந்தி வாழ நினைக்கும் ஜானி, நன்றாக வாழ்ந்து பெண்ணால் கெட்டுப்போன வித்யாசாகர்.

இவர்களின் வாழ்க்கை, ராஜாவின் இசை என மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 'ஜானி', சிறை செல்லும் ஜீவனின் வாழ்க்கைக் கதை சொல்லும் மோகன் லாலின் 'சீசன்', சிறுவனின் பாலுணர்வு, காதல், ஏக்கம், புரிதல் பற்றியும், நகரத்தில் அனாதையாக்கப்பட்ட அழகியப் பெண்ணின் வாழ்க்கைப் பற்றியும் சொல்லும் மோனிகா பெலூச்சி நடித்த 'மிலனா', மைக்கேல் ராட்ஃபோர்ட் இயக்கத்தில் புகழ்பெற்ற ரஷ்யக் கவிஞர் நெருதாவின் கவிதைகள், அரசியல் மற்றும் அழகான காதல் காதல் சொல்லும் 'தி போஸ்ட் மேன்' ஆகிய படங்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

நித்யாமேனன்

உடல் தோற்றம் குறித்து நித்யாமேனன்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த 'தலைவன் தலைவி' படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடுகின்றன.

கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற ஸ்டீரியோ டைப்பை உடைத்து, தனக்கான கதைக் களத்தை தேர்வு செய்வதில் நித்யா மேனன் தொடர்ந்து வெற்றிப்பெற்று வருகிறார் என்பதற்கு, தலைவன் தலைவி ஒரு சிறந்த உதாரணம்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், 'நடிகை என்றால் ஒல்லியாகத்தான் தோற்றமளிக்க வேண்டும் என்ற கடுமையான அழுத்தம் இருக்கும் ஒரு துறையில், எல்லோரும் கவனிக்கும் மேலோட்டமானதைக் கடந்து வேறு ஏதாவது ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அது எனக்கு மிகவும் முக்கியம்.

மக்கள் உணர்ச்சியின், ஆன்மாவின் தாக்கத்தை உணரும் வகையில் நடிப்பது அவர்களின் கண்களை மட்டுமல்ல, இதயத்தையும் தாக்கும். அதுதான் எனக்கு முக்கியம். என் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் தோற்றமளிப்பது பற்றியது அல்ல. அதை அழகாகச் செய்பவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடிக்க விரும்புகிறேன். உண்மையான மனிதர்கள் எல்லா வடிவங்களிலும் வருகிறார்கள்.

நாம் அனைவரும் ஒரே மாதிரியாகத் தெரிவதில்லை, நாம் அப்படி இருக்கவேண்டியதுமில்லை. நான் யதார்த்தமான படங்களை உருவாக்க, உண்மையான தோற்றத்தில் தோன்றுவது முக்கியம். 'தலைவன் தலைவி' படத்தில் எனக்கென ஒரு மேக்கப் மேன் கிடையாது. எப்படி இருக்கிறேனோ அப்படியே நடித்தோம்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT