'குளிர்கால சொர்க்கம்' என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தில் சுற்றுலா ஆர்வலர்கள் பயணம் செய்ய வேண்டிய முக்கிய இடங்களும், அவற்றின் சிறப்புகளும்...
ஜெர்மாட்:
பனிச்சறுக்கு ஆர்வலர்களிடம் பிரபலமான இந்த இடத்தில் கார்களே இல்லை. 360 கி.மீ.க்கும் அதிகமான பனிச்சறுக்கு ஓட்டங்களையும், அமைதியான சூழலையும் அளிக்கிறது. இந்த இடத்தில் பனி மூடிய ஆல்ப்ஸின் வியக்கத்தக்கக் காட்சிகள் உள்ளன.
செயின்ட் மோரிட்ஸ்:
கவர்ச்சிகரமான சூழலுக்குப் பெயர் பெற்ற ஆடம்பர குளிர்கால ரிசார்ட் இது. இரண்டு முறை குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றுள்ளன. பனிச்சறுக்கு, பனிக் குதிரை பந்தயம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். ஆடம்பரமான ஹோட்டல்கள், சுவையான உணவகங்கள் இங்குள்ளன.
ஜங்ஃப்ராவ்:
'ஐரோப்பாவின் உச்சி' என்று அழைக்கப்படும் அற்புதமான குளிர்கால அதிசயமான ஜங்ஃப்ராவ்வை அழகிய ரயில் பயணத்தில் எளிதில் அடையலாம். ஸ்லெட்ஜிங், பனிச்சறுக்கு, ஹைகிங் போன்றவை இங்குள்ளன.
லுசெர்னே:
ஆல்ப்ஸ் மலைகளின் பின்னணியில் லூசெர்ன் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள அழகான நகரமான இங்கு குளிர்கால நடைப்பயணங்கள், கலாசார ஆய்வுகள் சிறந்து விளங்குகின்றன. சேப்பல் பாலம், லயன் நினைவுச்சின்னம், சுவிஸ் போக்குவரத்து அருங்காட்சியகம் உள்ளிட்டவை இயற்கை, கலாசார அனுபவங்களை அளிக்கின்றன.
இன்டர்லேகன்:
துன் ஏரிக்கும், பிரைன் ஏரிக்கும் இடையில் அமைந்துள்ள இன்டர்லேகன் குளிர்கால விளையாட்டுகள், சாகச செயல்களுக்குப் பெயர் பெற்ற இடம். பார்வையாளர்கள் பாராகிளைடிங்ஸ், பனிச்சறுக்கு ஆகியவற்றை அனுபவிக்கலாம். பனி மூடிய மலைகளின் நல்லதொரு காட்சியை ஹார்டர் குல் மூக்கு அளிக்கிறது.
பனிப்பாறை எக்ஸ்பிரஸ்:
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகள் வழியாகச் செல்லும் ஜெர்மாட், செயின்ட்மோரிட்ஸை இணைக்கும் அழகிய ரயில் பயணமே பனிப் பாறை எக்ஸ்பிரஸ் ஆகும். இந்தப் பயணத்தில் 291 பாலங்கள், 91 சுரங்கப் பாதைகள் உள்ளன.
டாவோஸ்:
ஆல்ப்ஸ் மலைத் தொடரின் மிக உயரமான நகரமான டாவோஸ் -குளிர் கால விளையாட்டுகள், துடிப்பான ஏப்ரெஸ் ஸ்கை காட்சிகளுக்கான மையமாகும். கிராஸ் கண்டிரி ஸ்கையிங் உள்ளிட்டவை உள்ளதால், இந்த இடத்துக்கு 'உடல்நல ரிசார்ட்' என்ற பெயரும் உண்டு.
லாட்டர் ப்ருனென்:
உயர்ந்த பாறைகள், பனிச்சிகரங்களால் சூழப்பட்ட இந்தப் பகுதியில் 72 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. குளிர்கால நடைப்பயணங்கள் செல்வதற்கு ஏற்றது. உறைந்த ஸ்டாபாச் நீர்வீழ்ச்சி இதன் அழகை அதிகரிக்கிறது.
மான்டிரிக்ஸ்:
ஜெனிவா ஏரியின் கரையில் அமைந்துள்ள மான்டிரிக்ஸ் மிதமான குளிர்காலம், பிரமிக்க வைக்கும் ஆல்பைன் காட்சிகளுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள கிறிஸ்துமஸ் சந்தை குளிர்காலத்தின் சிறப்பு அம்சமாகும்.
கிரின் டெல் வால்ட்:
இந்த அழகிய ஆல்பைன் கிராமம் பனிச்சறுக்கு, கேபிள் கார் சவாரிக்கு ஏற்றது. ஜங்ஃப்ர்வ் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. ஈகர் வடக்கு முகத்தின் கண்கவர் காட்சிகளை அளிக்கிறது. குளிர்கால மலையேற்றப் பாதைகளில் சிலவற்றுக்கான தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது. கிறிஸ்துமஸ் சந்தைகளில் நிறைய கைவினைப் பொருள்களை வாங்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.