என்ன கேட்டேன்னு அந்த போலீஸ்காரர் உன்னை அடிச்சாரு...?'
'ஊதிக் காட்டுன்னாரு.. விசிலைக் குடுங்கன்னு கேட்டேன்...'
தே.சந்தியா, விருதுநகர்.
'திருடுவியா, திருடுவியான்னு போலீஸ் அடி பின்னிட்டாங்க?'
'அப்புறம்...'
'திருடுறேன்னு உறுதியாகச் சொன்னதுக்கு அப்புறம்தான் விட்டாங்க?'
ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
'இந்தக் கதையை நீங்கத் திருடி படம் எடுத்ததை யாரும் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்றீங்களே...எப்படி?'
'திருடும்போது முகமூடி போட்டிருந்தேனே...'
பர்வீன் யூனுஸ், சென்னை.
'கஷ்டப்பட்டு கதவை உடைச்சிட்டு ஏன் திருடாம போறோம்.. பாஸ்...'
'டேய்... இது நம்ம வக்கீல் வீடு...'
அ.ரியாஸ், சேலம்.
'நம்ம படத்துக்கு 'ஆயுள் கைதி'ன்னு பெயர் வைக்க வேண்டாமுன்னு சொன்னேன் கேட்டியா...?'
'இப்போ என்ன ஆச்சு பாஸ்...'
'ரிலீஸ் பண்ண முடியலையே...'
-வெ.கார்த்திகா, திண்டுக்கல்.
'ஏன்யா நீ... எப்பவும் சைக்கிள் மட்டுமே திருடறே...?'
'மோட்டார் சைக்கிள் ஓட்ட என்னிடம் லைசென்ஸ் இல்லை சார்...'
தீபிகா சாரதி, சென்னை.
'பேசிட்டு இருக்கும்போதே என் கணவரோட செல்போன் திருடு போச்சு சார்...'
'ஆச்சரியமா இருக்கே... அது எப்படி?'
'அவருக்கு தனக்கு தானே பேசிக்கிற பழக்கம் இருக்குது சார்....'
வி.சாரதி டேச்சு, சென்னை.
'என்னப்பா போட்டோ எடுக்கிறேன்... நீ என்ன பயப்படாம சிரித்தபடியே போஸ் கொடுக்கறே...'
'எதிர்பாராவிதமா எனக்கு ஒரு ஆன்டிராய்டு போன் கிடைக்கப் போகுதே...?'
'ஒரு குச்சியைக் காட்டி 'நினைத்ததை நடத்தும் மந்திரக்கோல் இது'ன்னு சொல்லி பல பேரை ஏமாத்திட்டு பணத்தைக் குவிச்சிட்டான் சார்...'
'சரியான 'கோல் மால்' பேர்வழின்னு சொல்லு...'
'யாருப்பா நீ.. எதுக்கு என்னை அவுங்ககிட்ட பத்து ஆயிரம் தரச் சொல்றே...?'
'வாங்கின கடனை திருப்பலைன்னு என்னை வெட்ட வர்றாங்க சார்... உங்க வீட்டுல கொலை நடந்தால் என்னோட ஆவி இங்கே சுத்துமே சார்...'
வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.