தினமணி கதிர்

வாசுகி சரக்கு ரயில்...

'வாசுகி' என்பது கடலில் வாழும் மிகப் பெரிய பாம்பு என்று புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன.

ராஜிராதா

'வாசுகி' என்பது கடலில் வாழும் மிகப் பெரிய பாம்பு என்று புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்தப் பெயரை ஒரு சரக்கு ரயிலுக்கு வைத்திருக்கின்றனர்.

தென் கிழக்கு மத்திய ரயில்வேக்கு உள்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரிலிருந்து பிலாஸ்பூர் நகருக்குச் செல்லும் சரக்கு ரயில்தான் இந்தியாவின் மிக நீண்ட, மிக கனமான சரக்கு ரயில். ஆகவேதான் இந்தப் பெயர்.

இந்த ரயிலை 6 இஞ்சின்கள் 295 சரக்கு பெட்டிகளுடன் இழுத்துச் சென்று ஏழு மணி நேரத்தில் 224 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 2021ஜனவரி 22இல் இருந்து ஓடும் இந்த ரயில் மொத்தம் 3.5 கி.மீ. நீளம் கொண்டது. ஒரு சராசரி ரயில் நிலையத்தில் நுழைந்து வெளியேற நான்கு நிமிடங்கள் ஆகும். 295 சரக்கு பெட்டிகளில் மொத்தம் 27 ஆயிரம் டன் கரி அனுப்பப்படுகிறது.

இந்த நிலக்கரி 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி நிலையத்தின் ஒரு நாள் எரி பொருள் தேவை. இந்தியாவில் ஒரு சராசரி சரக்கு ரயிலானது 5860 வேகன்கள் மூலம் 3,800 டன் நிலக்கரியை எடுத்துச் செல்லும். இத்தனைக்கும் வாசுகி சரக்கு ரயிலில் ஒரு முதன்மை டிரைவர், ஒரு உதவி டிரைவர், ஒரு கார்டு மட்டுமே உள்ளனர். ஆறு எஞ்சின்களை சரக்கு வாகனங்களுடன் ஒன்றின் பின் ஒன்றாக இணைத்து அனுப்புகின்றனர்.

இதனால் இந்த ரயில் தடம் புரளுவதோ,வளையும்போதோ அல்லது கப்பிலிங்கால் பிரச்னைகளோ எழுவதில்லை. இதனால் எரிபொருள் சேமிப்பதோடு, ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை மார்போடு சேர்த்தவளே... நிகிதா தத்தா!

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

என்னை அடியோடு சாய்த்தவளே... கீர்த்தி சனோன்!

அன்பூரில் பூத்தவனே... அமேயா மேத்யூ!

ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை: 2 பேர் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT