தமிழ் படங்களில் நடித்த சில கிரிக்கெட் பிரபலங்களை அறிவோம்.
சுரேஷ் ரெய்னா
இயக்குநர் லோகன் எடுக்கும், பெயரிடாத படத்தில், சுரேஷ் ரெய்னா முதல் தடவையாக நடிக்கிறார்.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்த 'பிரியமான தோழி'யில் கெளரவ வேடத்தில் நடித்தார்.
ஹர்பஜன் சிங்
'பிரண்ட்ஷிப்', 'டிக்கிலோனா' ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார்.
சடகோபன் ரமேஷ்
சந்தோஷ் சுப்ரமணியன், போட்டா போட்டி, மதகஜராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி
விஷ்ணு விஷாலின் 'ஜீவா' எனும் கிரிக்கெட் சார்ந்த படத்தில் நடித்துள்ளார்.
இர்பான் பதான்
சியான் விக்ரமின் 'கோப்ரா' படத்தில், இன்டர்போல் அதிகாரியாக நடித்திருந்தார். அஜய் ஞானமுத்து படத்தை இயக்கியிருந்தார்.
ஸ்ரீசாந்த்
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த 'காத்து வாக்கிலே ரெண்டு காதல்' என்ற படத்தில் முகமது போமி என்ற வேடத்தில் நடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.