ஏ.ஆர்.ரஹ்மான் 
தினமணி கதிர்

சினிமா ரவுண்ட் அப்!

பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது.

டெல்டா அசோக்

ராமாயணம் கதைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை!

பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 'ராமாயண்' என தலைப்பு வைத்து சமீபத்தில் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

2026-இல் முதல் பாகம், 2027-இல் இரண்டாம் பாகம் என இரண்டு பாகங்களாக வெளியிடப்போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், ராவணனாக யஷ்ஷும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்கவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மல்ஹோத்ரா கூறுகையில், 'இப்போது ராமாயணா படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.

அது நமது கலாசாரத்தின் முக்கியமான கதை. அப்படத்தை எடுக்க வேண்டும் என்பது எனக்கு கனவு.நான் தயாரிக்கும் இந்த 'ராமாயண்' படத்திற்கு இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைக்கவிருக்கிறார்.

இவருடன் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைக்கவிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் பல முக்கியமான இந்திய திரைப்படங்களுக்கும், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து இசையமைக்கவிருக்கிறார்கள். ஒரு ரசிகனாக எனக்கு இது கனவு நனவான தருணம்' எனக் கூறியிருக்கிறார்.

தனுஷ் - ராஷ்மிகா மந்தனா

தள்ளி போய் விளையாடுங்கள் - எதிரிகளுக்கு தனுஷ் செய்தி!

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 - ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'குபேரா'. தனுஷின் 51-ஆவது திரைப்படமான 'குபேரா' படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தனுஷ் பேசுகையில், 'எனக்கு எதிராக எப்படியான எதிர்மறையான விஷயங்களையும் நீங்கள் கிளப்பலாம். ஆனால், என்னுடைய படத்தின் ரிலீஸூக்கு முன்னால் எதையும் தடுக்க முடியாது. எங்களோடு என்னுடைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

என்னைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களைச் சொல்லும் நீங்கள் கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்கள். இந்த சர்க்கஸ் இங்கே வேண்டாம். இங்கே இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல, 23 வருடங்களாக என்னுடனே இருக்கும் என்னுடைய வழித்துணை.

நீங்கள் சும்மா நான்கு வதந்திகளை கிளப்பி என்னை முடித்துவிடலாம் என்று நினைத்தால், அது மாதிரி முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. உங்களால் ஒரு செங்கல்லைக் கூட எடுக்கமுடியாது.' என்றவர், ரசிகர்களை நோக்கி, 'எண்ணம் போல் வாழ்க்கை. சந்தோஷத்தை வெளியில் தேடாதீர்கள். உங்களுக்குள் சந்தோஷம் இருக்கிறது.

நான் ஒரு வேளை சாப்பாடு இல்லாமலும் இருந்திருக்கிறேன். இன்று ஒரு நல்ல நிலையிலும் இருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும் நான் சந்தோஷமாகத்தான் இருப்பேன். 'குபேரா' மாதிரியான திரைப்படம் இந்த உலகத்திற்குத் தேவை. என்னை நம்புங்கள், இந்தப் படம் ரொம்ப முக்கியம். எனக்கு இந்தப் படத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது. 'வடசென்னை - 2' படத்தைப் பற்றி 2018-லிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்த வருடம் நடக்கும்...' என்று பேசினார் தனுஷ்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ராஷ்மிகா மந்தனா , ' தமிழில் நல்ல கதைகள் வந்தால் ஓடோடி வந்துவிடுவேன். எனக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழி வித்தியாசம் கிடையாது. அதுபோல, பேன் இந்தியா, ரீஜினல் என வித்தியாசம் பார்க்கமாட்டேன். நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

ப்ரீத்தி ஜிந்தா

ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு நிதி - ப்ரீத்தி ஜிந்தா அசத்தல்!

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி வழங்கி இருக்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப நல அசோசியேசனுக்கு இந்த நிதியை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 'நம் வீரர்களின் துணிச்சலான குடும்பங்களை ஆதரிப்பது நமது பொறுப்பாகும். நம் ராணுவ வீரர்கள் செய்த தியாகங்களை நாம் ஒருபோதும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும், நாம் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று அவர்கள் முன்னேற உதவ முடியும். நமது வீரர்களைப் எண்ணி பெருமைப்படுகிறோம். மேலும் தேசத்திற்கும் அதன் துணிச்சலான பாதுகாவலர்களுக்கும் ஆதரவு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்' என்று அவர் தெரிவித்தார்.

இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ப்ரீத்தி ஜிந்தா ஐ.பி.எல். பஞ்சாப் அணியின் பங்குதாரராக இருக்கிறார். கார்ப்ரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ஐ.பி.எல் அணியில் கிடைத்த வருமானத்தில் ப்ரீத்தி ஜிந்தா இந்த நிதியை வழங்கியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT