தினமணி கதிர்

பேல் பூரி

பாகம் பிரிக்கப்படாத இல்லம்.

DIN

கண்டது

(திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அன்னதானபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் எழுதியிருந்தது)

'பாகம் பிரிக்கப்படாத இல்லம்.'

-சங்கீத.சரவணன், மயிலாடுதுறை.

(நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட வேதாரண்யத்தில் உள்ள ஒரு கோயிலின் பெயர்)

'இராமருக்கு இலக்கு அறிவித்த விநாயகர்'

-வசந்தா சித்திரவேலு, கருப்பம்புலம்.

(திண்டிவனம் அருகேயுள்ள உள்ள ஓர் ஊரின் பெயர்)

'சுண்டக்காபாளையம்'

சிவராமன் ரவி, பெங்களூரு.

கேட்டது

(சென்னை தி.நகரில் இரு பெண்கள் பேசியது)

'அந்த ஜவுளிக்கடையில் பொம்மையை ஏன் மாத்தறாங்க?'

'அதுக்கு ரொம்ப வயசு ஆகிட்டதாம்..'

பர்வதவர்த்தினி, பம்மல்.

(தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் தம்பதியும், குழந்தையும்...)

'உன் கூட விளையாட தம்பி பாப்பா வேணுமா..? தங்கச்சி பாப்பா வேணுமா...?'

'நீங்க விளையாடதீங்க டாடி... எனக்கு வீடியோ கேம் விளையாட மொபைல் போன் இருந்தால் போதும்....'

வி.ரேவதி, தஞ்சாவூர்.

(சென்னையில் உள்ள ஓர் வங்கியில் ஊழியரும், வாடிக்கையாளரும்...)

'எங்க பேங்கில் தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் லோன் கொடுப்போம்...'

'என் தம்பியை எனக்கு முப்பது வருஷமா தெரியும். அப்போ அவனுக்கு லோன் கொடுப்பீங்களா... சார்...'

வி.சாரதி டேச்சு, சென்னை - 5.

யோசிக்கிறாங்கப்பா!

ஒருவனின் பசியை நீ நீக்கினால், நீ தான் அவனுக்கு கடவுள்.

துடுப்பதி வெங்கண்ணா, ஈரோடு.

மைக்ரோ கதை

அந்த கிராமத்தில் அடுத்தடுத்து திருட்டுகள் நடைபெற்றன. உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், திருடியவன் யாரென்று பிடிபடவில்லை. போலீஸார் ஒருவழியாகத் தொடர் திருட்டில் ஈடுபட்டவனைப் பிடித்துவிட்டனர். பின்னர் அவனை காவல் நிலையத்தில் வைத்து, போலீஸார் உதைத்துப் பின்னியெடுத்தனர்.

'எப்படிடா.. எப்படி திருடினேன்னு..' என்று போலீஸார் பலமுறை கேட்டும், 'யாருக்கும் தெரியாமல் திருடிட்டேன் சார்' என்று திருடன் திரும்பத் திரும்பப் பதில் சொன்னான். 'ஏன்டா தெரிஞ்சே யாராவது திருடுவாங்களா? இதற்கு வேற அனுமதி கொடுப்பாங்களோ' என்று காவல் அலுவலர் மிரட்ட, திருடனோ கதறிவிட்டான்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

எஸ்.எம்.எஸ்.

வார்த்தைகள் கூற முடியாததை கண்கள் வெளிப்படுத்தும்.

மஞ்சுதேவன், பெங்களூரு.

அப்படீங்களா!

'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் ஏ.ஐ. வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. 2027ஆம் ஆண்டுக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி முழுவதையும் ஏ.ஐ. நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, டிஜிட்டல் உத்தி 202527ஐ அபிதாபி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக, 3.3 மில்லியன் அமெரிக்கா டாலர்களை அபுதாபி அரசு ஒதுக்கியிருக்கிறது. 2027ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், அனைத்துச் செயல்களிலும் கிளவுட் கம்யூட்டிங்கை ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. அரசின் இந்த உத்தி 2027ஆம் ஆண்டுக்குள் அபுதாபி பொருளாதாரத்துக்கு 24 பில்லியன் திர்ஹாம்களுக்கு மேல் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தி ஏ.ஐ. பயிற்சி மூலம் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்துகிறது.

அதே நேரத்தில் அரசு சேவைகளுக்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட ஏ.ஐ. இயக்கத் தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. அதோடு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அபுதாபி அரசு செயல்படுத்துதல் துறைத் தலைவர் அகமது அல்குட்டாப் கூறியது:

'ஏ.ஐ. கிளவுட் கம்யூட்டிங், அனைத்துத் தரவுகளின் நுண்ணறிவுகளை இணைப்பதன் மூலமாக, மக்களுக்குப் பொதுச்சேவை வடிவங்களை மாற்றுவோம். அரசின் செயல்பாடுகளை மேம்படுத்துவோம். அதோடு, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்போம்' என்கிறார்.

கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

SCROLL FOR NEXT