தினமணி கதிர்

பள்ளியில் 'ஹெல்த் சென்டர்'

'பள்ளியில் மாணவர்களுக்கு தரமான கல்வி போதிப்பதுடன், அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் அக்கறை செலுத்துவது அவசியம்...

DIN

தாம்பரம் மனோபாரதி

'பள்ளியில் மாணவர்களுக்கு தரமான கல்வி போதிப்பதுடன், அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் அக்கறை செலுத்துவது அவசியம் என்பதை உணர்ந்து, தாம்பரம் சீயோன் பள்ளி வளாகத்தில் தொடங்கி இருக்கும் மருத்துவச் சேவை மையம்தான் 'சீயோன்ஹெல்த் சென்டர்'. இதுபோன்ற மருத்துவ மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் தேவை' என்கிறார் சீயோன், ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவர் என்.விஜயன்.

சென்னையின் புறநகர் பகுதியான கிழக்கு தாம்பரம் சேலையூர் சீயோன் சர்வதேச பொதுப் பள்ளி வளாகத்தில் 'சீயோன் ஹெல்த் சென்டர்' (ஆயுஷ் மைத்ரி) தொடங்கி இருப்பது குறித்து, அவரிடம் பேசியபோது:

'கரோனா காலத்துக்குப் பின்னர் பள்ளி மாணவர்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்களைக் காண நேர்ந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளில் பயின்று வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்வித் திறன், செயல்பாடு , உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். இதில் பார்வைக் கோளாறு காரணமாக, கண்ணாடி அணிந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது எனக்கு பெரும் அதிர்ச்சி,கவலையை ஏற்படுத்தியது.

விளையாட்டு நேரத்தில் சில குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்காமல் சோர்ந்துவிடுகின்றனர். வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து அவர்கள் அன்றாடம் உண்ணும் உணவில் இல்லை என்பதே இதற்கு காரணமாகும். பெரும்பாலான பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து நிறைந்த பலகாரம், உணவை வீட்டில் சமைத்துக் கொடுப்பதில்லை. சில குழந்தைகள் ஆன்லைனில் தாங்களாகவே ஆர்டர் செய்து சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது.சில குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை. சில குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதையும் கேள்விப்பட்டேன்.

மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுடன்,அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கூடுதலாக ஏதேனும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்தேன். இதுதொடர்பாக பெற்றோர், கல்வியாளர்கள், ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்ததன் விளைவாக உருவானது தான் 'பள்ளி மாணவர்களுக்கான முழு உடல் பரிசோதனைத் திட்டம்'.

சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளில் பயின்று வரும் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் இந்தத் திட்டம் மூலம் பயன் பெற உள்ளனர். 1ஆவது வகுப்பு முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவர்களுக்கு 7 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை நடத்தி, தேவையான சிகிச்சை குறித்து பெற்றோரிடம் பரிந்துரை செய்வர்.கூடவே அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை, மதியம், இரவு என்ன உணவு கொடுக்கலாம் என்பது குறித்த அட்டவணைப் பட்டியலையும் பெற்றோரிடம் வழங்கி அவற்றை பின்பற்றக் கோரி பரிந்துரை செய்ய உள்ளோம்.

பள்ளி ஆண்டு விழாவைப் போன்று ஆண்டுதோறும் இனி பள்ளி மாணவர்கள் உடல் ஆரோக்கியத் தினம் விழாகொண்டாட திட்டமிட்டுள்ளோம். இதை ஒரு முன்மாதிரித் திட்டமாகச் செயல்படுத்த முனைந்துள்ளோம். சில பெற்றோர்களிடம் இந்தத் திட்டம் குறித்து விவரித்தபோது, அவர்கள் மகிழ்ந்தனர்.கல்விக்கு எந்த அளவுக்கு முன்னுரிமை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு மாணவர்களின் உடல்நலனிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கல்வி கற்கும் மாணவர்கள் உடல் நலனுடன் வளர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டு இருக்கும் 'சீயோன் ஹெல்த் சென்டர் திட்டம்' மூலம் எங்கள் குழுமத்தின் 6 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள், 2 ஆயிரம் ஆசிரியர்கள், இதர ஊழியர்களும் பயன்பெற உள்ளனர்' என்கிறார் என்.விஜயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

மாலை மங்கும் நேரம்... திஷா பதானி!

SCROLL FOR NEXT