தினமணி கதிர்

அழகே.. அழகின் அழகே..!

உலகில் பல்வேறு விஷயங்கள் அறிந்தும், அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்றன.

ராஜி ராதா பெங்களூர். எஸ்.பக்கிரிசாமி

உலகில் பல்வேறு விஷயங்கள் அறிந்தும், அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்றன. அந்த வகையில் அழகுக் கலைகளின் சொர்க்கமாக உலகம் இருக்கிறது. வியக்க வைக்கும் சில விஷயங்களை அறிவோம்:

காஸ் பீட பூமி

கடல் மட்டத்திலிருந்து 3,937 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அதன் தட்டையான உச்சியில் ஆகஸ்ட்- அக்டோபர் இடையில் இந்தப் பகுதியே மலர்களின் அதிசயமாக மாறி விடுகிறது. மகாராஷ்டிரத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இந்த இடத்தில் ஆர்க்கிட்டுகள், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய கார்வி புதர் என 850 பூக்களின் தாயகம் ஆகும்.

மார்ச் மாதத்தில் லேசான வெளிப்பாடு தெரியும். மே மாதத்தில் இளம் சிவப்பு ஊதா, மஞ்சள் நிறங்களில் இயற்கை கம்பளத்தை ஒத்திருக்கும் காட்சியை ரசிக்கலாம். இந்தப் பகுதி உண்மையில் இரவில் இங்கு நின்று நட்சத்திரங்களைப் பார்க்க சிறந்த இடம்.

அருகில் உள்ள யம்னோலி கிராமம், நட்சத்திர பார்வைக்கு மேலும் சிறந்த இடமான இந்தப் பகுதியை 'பூக்களின் பள்ளத்தாக்கு' என அழைக்கின்றனர்.ஆகஸ்டு-அக்டோபர் காலகட்டத்திலும் ரசிக்கலாம். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி. யுனெஸ்கோ பல்லுயிர் பெருக்கப் பட்டியலில் இந்த இடமும் இடம் பெற்றுள்ளது.

வரலாற்றுக்கு முந்திய கால கற்கள்:

தெலங்கானாவின் நாராயண் பேட்டை மாவட்டத்தில் உள்ள முதுமாலில் 3, 500ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தியதாக நிற்கும் கற்கள் சுமார் 80 ஏக்கரில் உள்ளன. யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்களாக அங்கீகாரம் வாங்க, இந்தியா புதிய ஆறு சின்னங்களை அண்மையில் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்துள்ளதில் இதுவும் ஒன்று.

உலகின் பல பகுதிகளில் இப்படி நினைவுக் கற்கள் நிற்கின்றன. இதனை அரிய தொல்பொருள் வானியல் தளம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு ஒரு கன சதுர வடிவ பாறை உள்ளது. இதனை இரவில் வானை அறிந்திகொள்ள பயன்படுத்தியிருக்கலாம். அதனால் இது ஒரு வான கண்காணிப்பு இடம் என்கின்றனர் வல்லுனர்கள்.

'இவை தியாகத்தலங்கள்' என பொதுவானவர்கள் கூறுகின்றனர்.

ஐஸ்லாந்தின் யானைப்பாறை

ஐஸ்லாந்தின் வெஸ்ட் மேன் தீவுகள் கூட்டத்தில் உள்ள ஹொய்மே தீவின் மேற்குப் பகுதியில் யானைப் பாறை உள்ளது. ஒரு எரிமலைப் பாறை நெடு வரிசை இணைப்பால் உருவானது. யானையின் தலை, தும்பிக்கை காட்சியை இது தத்ரூபமாய் ஒத்திருக்கிறது. காலப் போக்கில் காற்று, நீர், பனிஅரிப்பு ஆகியவற்றால் இந்த உருவம் வந்துள்ளது. தண்ணீரிலிருந்து பார்த்தால் யானை முகம் சிறப்பாகத் தெரியும்.

ஐஸ்லாந்தின் யானைப்பாறை

ஐஸ்லாந்தில் கடற்கிளிகளை கடலுக்குள் பறக்க விடுதல்

ஐஸ்லாந்தின் தெற்குக் கடற்கரை பகுதியில் வேஸ்ட்மேன் தீவுகள் உள்ளன. இவற்றில் 'ஐபேர்' என்ற சிறிய நகரில் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் காலையில் பாறைகளிலிருந்து சுமார் 300ஆண்டுகளாக கடற்கிளிக் குஞ்சுகள் பறக்க விடப்படுகின்றன.

இந்தக் கிளிகள் வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு இரவு நகருக்குள் வந்து துவாரங்கள், இசகு பிசகான இடங்களில் சிக்கிக் கொள்கின்றன. பல வெளிச்சத்தில் அடிபட்டு தெருக்களில் விழுகின்றன.தோட்டங்களில் கிடக்கின்றன. இரவு 9 மணி முதல் விடியற்காலை மூன்று மணிவரை மக்களால் இவை சேகரிக்கப்பட்டு, பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.

காலையில் விளக்குகள் அணைக்கப்பட்டு சூரியன் புறப்பட்டதும், நகரின் பெரிய பாறைகளில் ஏறி நின்று குஞ்சுகளை கடலை நோக்கி பறக்க விடுகின்றனர். அப்படி செய்தால்தான் அவை சிறகுகளை அடித்துகொண்டு கடலுக்குள் பறந்துவிடுகின்றன. இவை கடலுக்குள் 60 மீட்டர் ஆழம் வரை உள்ளே சென்று இரைகளை தேடிக்கொள்ளும் திறன் படைத்தவை.

ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே ஈன்று குஞ்சு பொறித்து, பறக்க தயார் செய்கின்றன. குறிப்பிட்ட ஒரே துணையையே இது இனப்பெருக்கத்தின்போது, அழைத்து வந்து உறவு கொள்ளும். காலையில் ஏன் பறக்க விடணும். இரவே பறக்க விடலாமே என கேட்கலாம்.

அப்படி இரவு பறக்க விட்டால் அவை போன வேகத்திலேயே விளக்கு வெளிச்சத்தை நோக்கி திரும்பி விடுகின்றன.இப்படி நடப்பது இரு மாதங்கள் மட்டுமே.தூரம் பறந்து சென்ற கிளிக் குஞ்சுகள் திரும்புவதில்லை.இந்த கிளிக் குஞ்சுகள் ஒரு நிமிடத்தில் 100-க்கு மேல் இறக்கைகளை அடித்தபடி பறப்பதே அழகு. இவை 'பஃபின்', 'கடற் கோமாளி' என அழைக்கப்படுகின்றன.

நடந்தே ரசிக்கும் ஜெனோவா

நடந்தே ரசிக்கும் ஜெனோவா

உலகில் மிலன், கோபன்ஹேகன், டூரின், டப்ளின்,லியோன், முனிச் உள்பட பல நகரங்களை நடந்தே பார்த்துவிடலாம். இந்தப் பட்டியலில் ள்ள மற்றொரு நகரம் ஜெனோவா. இத்தாலியில் கி.மு. காலங்களிலிருந்தே உள்ள கடற்கரை துறைமுக நகரம்.

பொருளாதாரம், பணப் புழக்கம் அதிகம் கொண்டது. ஆனால் ரோம், வெனிஸ் போன்ற நகரங்கள் இன்று பிரபலம் அடைந்து விட்டதால் அதிகம் பேசப்படாத மறைந்துள்ள ரத்தனமாகிவிட்டது. அரண்மனைகள், டெர கோட்டா கூரை வீடுகள், அருங்காட்சியகங்கள், சுவையான கடல் உணவுகள் ஆகியவற்றுக்கு இந்த நகரம் மிக பிரபலம்.

உலகின் முதல்அரசு வங்கி 1407-இல் இங்கு தான் துவக்கப்பட்டது. ஜெனோவா என்றால் முழங்கால், கதவு, வழிப் பாதை என பல அர்த்தங்கள் கூறுவர்.

வட மேற்கு இத்தாலியில் இருந்த இதனை மத்திய தரைக்கடல் துறைமுகம் எனவும் அழைப்பர். கோதிக் கட்டட கலையில் உருவான கட்டடங்கள்,தேவாலயங்களுக்கு மிகவும் பிரபலம். கொலம்பஸ் பிறந்த ஊர். பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் நகரங்களில் ஜெனோவாவும் ஒன்று.

கடற்கிளிகளை கடலுக்குள் பறக்க விடுதல்

பாலிவுட் பார்வையில் சிலி

அமெரிக்கா, ஸ்பெயின், அபுதாபி, நியூஸிலாந்து,உக்ரைன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, மொரிஷியஸ்,எகிப்து, துபை, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் பாலிவுட் திரைப்படங்கள் படமாக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் சிலி என்ற நாடும் இணைந்துள்ளது. 'எங்கள் நாட்டில் வந்து இலவசமாக சூட்டிங் நடத்திக் கொள்ளுங்கள்' என சிலி அரசு அழைக்கிறது.!

சிலி தென் அமெரிக்க கண்டத்தில் மேற்கேயுள்ள குடியரசு நாடு. அந்தீக மலைக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையில் உள்ளது. அதிக வருமானம் கொண்ட பொருளாதார நாடு. கவிஞர்கள் இங்கு அதிகமாக உள்ளதால், 'கவிஞர்களின் நிலம்' என்ற பெயரும் உண்டு.

பரந்து விரிந்த பள்ளத்தாக்குகள், அழகிய பனி மூடிய மலைகள், ஆடம்பரமான ஹோட்டல்கள், வண்ணமயமான கட்டடங்கள், எல்லையோர வீடுகள், தென் அமெரிக்காவின் மிக உயர கட்டடமான இரண்டோரிபா, புகழ் பெற்ற அட்டகாமா பாலைவனம் உள்ளிட்டவை இங்கு சிறப்பு இங்கு நின்று விண்ணைப் பார்த்தால், செவ்வாய், வியாழன், சந்திரனை 'பளிச்'சென பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT