தினமணி கதிர்

பட்டேடா அஞ்சு புடவைக்கு புவிசார் குறியீடு

கர்நாடகத்தில் உள்ள கஜேந்திரகாட்டின் கைத்தறிப் புடவையான 'பட்டேடா அஞ்சு' புடவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ராஜிராதா

கர்நாடகத்தில் உள்ள கஜேந்திரகாட்டின் கைத்தறிப் புடவையான 'பட்டேடா அஞ்சு' புடவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தப் புடவையை 'கஜேந்திரகாட் புடவை' என்றும் அழைப்பர். இவற்றின் தனித்துவமான எல்லைக் கோடுகளுக்காக இது மிகவும் பிரபலம்.

வட கர்நாடகாவின் இல்கல், பெட்டகேரி, கஜேந்திர காட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் இந்தப் புடவைகள் பெண்களால் மிகவும் விரும்பி அணியப்படுகின்றன. இந்தப் பாணி புடவைகள் வாங்குபவர்களிடமிருந்து பெரும் பாராட்டை பெற்றுள்ளன.

கஜேந்திரகாட் நெசவாளர் சங்கத்தினரால் அறிமுகம் செய்யப்பட்டவை. மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து இதனை வாங்கிச் செல்ல மொத்த, சில்லறை வியாபாரிகள் வருகை தருகின்றனர்.

பெங்களுரிலிருந்து இந்த ஊர் 412 கி.மீ தூரத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT