தினமணி கதிர்

மைக்ரோ கதை

மைக்ரோ கதை குறித்து...

DIN

''கமலா... நீயும் உன் மகனுக்கு எவ்வளவோ பெண் பார்த்துட்டே... வயசு அதிகமாகயிருக்குன்னு தட்டிக்கிட்டே போகுது.. நான் சொல்றதை செய்.. இது தப்பு இல்லை. பையன் ஜாதகத்தில் வயசு குறைச்சி புது ஜாதகம் எழுது. ஜாதகம் பார்க்காமலே கல்யாணம் பண்ணவங்க நல்லா இல்லையா...?'' என்று விமலா கூறினார்.

தனது தோழி சொன்னதைக் கேட்டு, 'தனது மகனுக்குத் திருமணமானால் போதும்' என்று சம்மதித்து ஜோசியரிடம் புது ஜாதகத்தை எழுதினாள்.

பின்னர், 'பெண் வேலைக்குப் போகிறாள். நல்ல வசதியான குடும்பம், ஒரே பெண். அவர்களும் ரொம்ப நாளா மாப்பிள்ளை தேடுகிறார்கள்' என்று உறவினர் சொல்லியனுப்பி தரகரிடம் ஜாதகம் கொடுத்தனுப்பினாள்.

மறுநாளே பெண் வீட்டில் இருந்து பதில் வந்தது. 'மாப்பிள்ளையைவிட பெண் மூத்தவள்' என்று கூற, கமலாவுக்கு தலைசுற்றலே வந்துவிட்டது.

-எஸ்.சோமசுந்தரம், அண்ணலக்ரகாரம்.

எஸ் எம் எஸ்

உனக்குப் பிடித்ததில் உன்னைத் தேடு. பிறருக்கு உதவுவதில் இறைவனைத் தேடு.

-த.நாகராஜன், சிவகாசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT