பிரபல மருத்துவர்கள் பலரும் தனித்துவமாக வாழ்கின்றனர். நோயாளிகளிடமோ, மக்களிடமோ, நெருங்கிப் பழகுவதில்லை. பணிச்சுமை, நேரமின்மை... என்று ஏற்றுகொள்ளக் கூடிய காரணங்களைச் சொல்லி சமூக நிகழ்வுகளுக்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. இருப்பினும், சில மருத்துவர்கள் பொதுமக்களோடு இரண்டறக் கலந்துள்ளனர்.
அந்த வரிசையில், சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்த ஐம்பத்து இரண்டு வயதான மருத்துவர் சி.மோதிலால் இடம்பிடித்துள்ளார். இவருக்கு உறுதுணையாக, கதிர்வீச்சு சிறப்பு மருத்துவரான அவரது மனைவி பிரபாவதியும் உடனிருந்து 25 ஆண்டுகளாக மருத்துவச் சேவையாற்றி வருகிறார்.
இதுகுறித்து மோதிலாலிடம் பேசியபோது:
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆத்துôர் அரசுப் பள்ளியில் படித்து, பிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றேன். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுôரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றேன். என்னுடன் படித்த பிரபாவதியை திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பின்னர், இருபது ஆண்டுகளுக்கு முன் உதயா அறக்கட்டளை'யை ஏற்படுத்தி, வாழப்பாடியில் மருத்துவமனையைத் தொடங்கினோம்.
எங்கள் மருத்துவமனையில், புறநோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி, படுக்கை வசதிகளை ஏற்படுத்தி உள்நோயாளிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
15 ஆண்டுகளாக, மாதம்தோறும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, ஆலோசனை வழங்கி வருவதோடு, இலவசமாக மாத்திரைகளும் வழங்கி வருகிறேன். இதன்படி, 200 முகாம்களை நடத்தி, ஆயிரக்கணக்கானோருக்குச் சிகிச்சையை அளித்துள்ளேன்.
வாழப்பாடியில் அரிமா சங்கத்திலும் முக்கிய பங்காற்றுகிறேன். அரிமா மாவட்டத்தின் இரண்டாம் நிலை துணை ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
அரிமா சந்திரசேகரன் என்பவருடன் இணைந்து அன்னசுரபி' என்ற திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பரிசோதனை, சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிகளுக்கு விலையில்லா அறுசுவை மதிய உணவை வழங்கிவருகிறேன்.
கதிர்வீச்சு சிறப்பு மருத்துவரான எனது மனைவி பிரபாவதி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஸ்கேனிங் பரிசோதனை மையத்தில், மாதம்தோறும் முதல் செவ்வாய்க்
கிழமைகளில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் இலவச ஸ்கேன் பரிசோதனை முகாம்களை நடத்தி, கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். எனது மகன் குறள்நிதியும் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று, மருத்துவராக உருவெடுத்துள்ளார்.
எனது சேவையை பாராட்டி, பல விருதுகளை பல்வேறு அமைப்புகள் அளித்துள்ளன. இருப்பினும், மக்கள் மருத்துவர்' என்று மக்கள் அழைக்கும் அடைமொழியை எனது சேவைக்கு அங்கீகாரமாகக் கருதுகிறேன் என்கிறார் மோதிலால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.