முகப்பு
செய்திகள்

ஆபாசம், அருவருப்பு... 3 ஆண்டுகளாக நடிகை ரவீனாவை துன்புறுத்தும் இரட்டைச் சகோதரர்கள்!

நடிகை ரவீனா ரவியின் சோகமான இன்ஸ்டா பதிவு குறித்து...

Updated On : 6 பிப்ரவரி 2026, 5:38 pm IST
நடிகை ரவீனா ரவி. - படங்கள்: இன்ஸ்டா / ரவீனா ரவி.
பகிர்:

நடிகை ரவீனா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ள பதிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து மூன்றாண்டுகளாக தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆபாச குறுஞ்செய்திகள், கமெண்ட்ஸ்கள் செய்து வருவதாக நடிகை பதிவிட்டுள்ளார்.

டப்பிங் கலைஞர் - நடிகை

Advertisement

Advertisement

நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால், மடோன்னா செபாஸ்டியன் உள்ளிட்ட தமிழ், மலையாளப் படங்களில் பல முன்னணி நாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து புகழ்ப்பெற்றார்.

டப்பிங் கலைஞராக இருந்து ஒரு கிடாயின் கருணை மனு (2017) திரைப் படத்தின் மூலம் ரவீனா ரவி நடிகையாக மாறினார்.

கடைசியாக லவ் டுடே, மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் மலையாளத்தில் ஆசாதி எனும் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகள் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

3 ஆண்டுகளாக தொல்லை

பொதுமக்களுக்காக: தவறவிட்டு விடாதீர்கள்

தொடர்ச்சியாக மூன்றாண்டுகளாக தொல்லை அளித்துவரும் நபர்களிடம் இருந்து என்னையும் எனது நண்பர்கள், குடும்பத்தினரையும் பாதுகாக்கவே இந்தப் பதிவிடுகிறேன்.

காவல்துறையிடம் அளித்த புகாரின் மூலமாவது இது நிற்கும் என நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக, சபரீஷ் எனும் நபரும் அவரது இரட்டை சகோதரரும் இணைந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருகிறார்கள்.

அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை மட்டுமல்ல எனக்கு நெருங்கியவர்களையும் இலக்காக்கி குறுஞ்செய்திகளும் கமெண்ட்களும் செய்து வருகிறார்கள்.

சென்னை பாதுக்காப்பான இடம்தானா?

என்னைப் பொருட்டு இந்தக் கொடுமைகளைச் சந்திக்க நேரிடும் எனது குடும்பத்தினர், நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சட்ட ரீதியாக முயன்று பார்த்தோம். ஆனால், தொல்லைகள் நீங்கவில்லை.

அதற்கு மாறாக, அவர் பல வலைதள கணக்குகளில் இருந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் தொல்லைக் கொடுத்து வருகிறார். நாங்கள் பழகியதாகவும் திருமணம் செய்கிறேன் என ஏமாற்றியதாகவும் கூறி வருகிறார்.

இந்த நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகள், கமெண்ட்ஸ்களுக்கு பதில் அளிக்காதீர்கள். சென்னை இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுக்காப்பான இடமென்று சொல்லுவார்கள். அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

summary

The post that actress Raveena Ravi shared with anguish on her Instagram page has surprised many.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments