FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இயக்குநராகத்தான் ஆசைப்பட்டேன்: நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் இயக்கும் புதிய திரைப்படம் குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:58 pm IST
பகிர்:

நடிகர் ரவி மோகன் தான் இயக்கிவரும் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ரோ கோட், பென்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிப்பதுடன், இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகர் ரவி மோகன், “இயக்குநராகத்தான் ஆசைப்பட்டேன். நிறைய திரை விழாக்களுக்குச் சென்றது, அப்பா மற்றும் அண்ணனின் திரைப்படங்களைக் கவனித்தது என இயல்பாகவே இயக்குநர் ஆசை இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக நடிகனாகிவிட்டேன். நீண்ட காலமாக இயக்குநராகத் திட்டமிட்டு இப்போது நிகழ்கிறது. ஒரு சாதாரண மனிதன் நல்ல மனிதாகி அந்த நல்ல மனிதன் எப்படி கடவுளாகிறான் என்கிற கோணத்தில்தான் இந்தப் படத்தின் கதை இருக்கும்.

Advertisement

Advertisement

10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கதையை யோசித்து வைத்திருந்தேன். என் அண்ணன் மோகன் ராஜாவிடமும் இக்கதையைச் சொல்லியிருக்கிறேன். அவரும் தன் கருத்துகளைச் சொன்னார். ஆனால், இறுதியான முடிவு என்னுடையதுதான். இப்படம் என்ன ஆனாலும் அது என் பொறுப்பாகத்தான் இருக்கும்.

இப்படத்திற்கு ஆர்டினரி மேன் எனப் பெயரிடுவதற்கு முன்பே தமிழிலேயே கடவுள் என்றே பெயரிட்டேன். ஆனால், ரசிகர்கள் வேறு எதையாவது யோசிக்கக் கூடாது என்பதற்காகா சாதாரண மனிதனைக் குறிப்பிடும் விதமாக ஆங்கிலத்திலேயே வைத்துவிட்டேன். இயக்குநரான அனுபவம் கலவையாகவே இருக்கிறது. ஒருநாள் ஜாலியாக இருந்தாலும் இன்னொரு நாள் கத்த வேண்டும். ஆனால், நல்ல திரைப்படமாக உருவாக அனைவரும் ஒத்துழைக்கின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Ravi Mohan has spoken about the film he is directing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments