உயிரோடு இருக்கும் வரை இனி சேரப்போவதில்லை: ரவி மோகன்
வைரலாகும் நடிகர் ரவி மோகனின் பதிவு...
நடிகர் ரவி மோகன் தன் குடும்பம் குறித்து பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது; புரமோஷன்களுக்கு வருவது என ஜோடியாக இருந்தனர்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் கெனிஷா, எனக்கு யாரும் வேண்டாம் என ரவி மோகனையும் பிரிந்தார். தொடர்ந்து, விவாகரத்து கிடைக்கும் வரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றார். ஆனால், ரசிகர்களின் கோரிக்கைகளுக்காக மீண்டும் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நண்பர்களான நாளான இன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உண்மையான நண்பர்களைப் போல என்னுடன் நின்ற மிகவும் அன்பானவர்களுக்கு இனிய நண்பர்கள் நாள் வாழ்த்துகள்.
சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புச் செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் நால்வரும் ஒரே அறையில் ஒன்றாக இருக்க மாட்டோம்.
உங்கள் நண்பர்களைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.” எனத் தெரிவித்துள்ளார். ரவி மோகனின் இப்பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
Actor Ravi Mohan has posted about his family.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.