'தலைவர்தான் பிளாங்க் செக் கொடுத்துட்டாரே... அப்புறம் ஏன் நீ சோகமா இருக்கே?''
'கையெழுத்துக்கூடப் போடாம பிளாங்கா கொடுத்தா... அது எப்படிச் செல்லும்?''
'புது வேலைக்காரி ஏன் அதுக்குள்ள வேலையவிட்டு நின்னுட்டா?''
'அவ சொல்ற ஊர் வம்பையெல்லாம் நான் ரசிச்சுக் கேக்கலையாம்!''
'டி.வி.யும் இப்ப சினிமா மாதிரி ரொம்ப ஃபேமஸ் ஆயிடுச்சுன்னு எதை வச்சு சொல்றீங்க?''
'முந்தியெல்லாம் கனவுல சினிமா நடிகைதான் வருவாங்க... ஆனா, இப்ப டிவி நடிகைகளும் வர ஆரம்பிச்சுட்டாங்களே!''
'என்னை ஏதாவது ஹோம்ல சேர்த்துவிடுப்பா... உன் பொண்டாட்டிகூட மல்லுக்கட்ட என்னால முடியலை!''
'ஹோமுக்கு என்னால பில்லு கட்ட முடியாதேம்மா!''
'உங்க பையன் உங்களைவிட தைரியசாலியா இருக்கான், சார்!''
'எப்படிச் சொல்றீங்க?''
'உங்க மனைவிகிட்ட எதிர்த்துப்பேசுறானே!''
'துடுப்போடு எங்கே கிளம்பிட்டீங்க?''
'பாட்டுக் கச்சேரிக்குத்தான்... இசை வெள்ளத்தில் நீந்த வாருங்கள்னு கூப்பிட்டு இருக்காங்களே!''
'ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு சொல்றே... ஆனா, நான் பொம்பளைன்னு எப்படிக் கண்டுபிடிச்ச?''
'மல்லிகைப்பூ வாடையை வைச்சுத்தான், தாயி!''
'நான் கோபமா இருந்தா என் மனைவியும்... அவ கோபமா இருந்தா நானும்... வாயைத் திறக்காம இருந்திடுவோம்!''
'எப்பவும் நீங்க மெளனமாய் இருக்க அதுதான் காரணமா, சார்!''
'எதிர் வீட்டுக்காரன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல அவருடைய மனைவிக்கு ஆடி கார் வாங்கி இருக்கார்!''
'அருமையான எக்சேஞ்ச் ஆஃபர் ஆச்சே!''
'நீங்க அடிக்கடி 'ஜெக்கம்மா சொல்றா... ஜெக்கம்மா சொல்றா'ன்னு சொல்றீங்களே... யாரு சார் அந்த ஜெக்கம்மா?''
'என் மனைவிதான்... என் மகன் ஜெகனோட அம்மாவை அப்படித்தான் செல்லமா கூப்பிடுவேன்!''
'பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லைங்கிற கவலையே இல்லை எனக்கு... மனைவியே போதும்னு முடிவு பண்ணிட்டேன்!''
'மனைவி உங்களை பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்களா, சார்?''
வி. ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.