அமெரிக்காவின் ஹார்வர்ட், யேல், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் படிக்க ஸாக் யாதேகரிக்கு அனுமதி கிடைக்கவில்லை. இருப்பினும், பதினெட்டு வயதான அவர், பல லட்சம் டாலர் மதிப்புள்ள செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலராகப் பொறுப்பை ஏற்று நடத்துகிறார்.
இவரது ஆண்டு வருமானம் சுமார் 300 லட்சம் டாலர். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.264 கோடி) . மியாமி பல்கலைக்கழகத்தில் படிக்கும் இவரிடம் 30 பேர் பணிபுரிகின்றனர்.
உணவுப் பொருள் ஒன்றில் எவ்வளவு கலோரி சக்தி உள்ளது' என்று கண்டறிய செயலி ஒன்றை ஸாக் உருவாக்கியுள்ளார். பின்னர், அந்த உணவை உண்ண வேண்டுமா? தவிர்க்கலாமா?' என்று பயனர் தீர்மானிக்கலாம். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் இந்தச் செயலி பெரிதும் பயன்படுகிறது.
இதுகுறித்து ஸாக் கூறியது:
மைன்கிராஃப்ட் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் ஈர்க்கப்பட்டு, ஏழு வயதில் கோடிங் செய்யத் தொடங்கினேன். எனது ஆர்வத்தைப் பார்த்த எனது அம்மா கோடைகால கோடிங் முகாமில் சேர்த்துவிட்டார். யூடியூப் காணொளிகளைக் கண்டும், இந்தத் துறையைச் சேர்ந்தோரின் வழிகாட்டலுடன் கோடிங்' நுணுக்கங்களை சிறு வயதிலேயே கற்றேன்.
நல்ல வருமானம் கிடைத்தாலும், படிப்பதற்காக கல்லூரி செல்வதை விடவில்லை. உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க செயலியை 2024 மே மாதத்தில் அறிமுகம் செய்தேன். இதுவரை சுமார் 80 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து, சந்தா கட்டி செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். லம்போர்கினி' காரை வாங்கியுள்ளேன். பெரிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பதுதான் லட்சியம்' என்கிறார் ஸாக் யாதேகரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.