கண்டது
(கோவை வடவள்ளியில் உள்ள ஒரு சலவையகத்தின் பெயர்)
'துவைத்து கட்டு'
எம்.சுப்பையா, கோவை.
(நாகர்கோவிலில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
வஞ்சப் புகழ்ச்சி அணியை நயம்படக் கையாளத் தெரிந்தோர் வாழ்வாங்கு வாழ்கின்றனர்.
உத்தமன்ராசா, அச்சன்புதூர்.
(சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
காதலில் தோல்வியுற்றவனுக்கு பல நாள் சோகம். ஜெயித்தவனுக்கு வாழ்நாள் சோகம்.'
எஸ்.சந்திரசேகர், முகப்பேர்.
கேட்டது
(திண்டுக்கல் பூங்கா ஒன்றில் முதியவர் தனது பேரனிடம்...)
இந்தக் காலம் மாதிரி அப்போ இல்லை!'
என்ன தாத்தா சொல்றீங்க?'
சைக்கிளில் லைட் இல்லைன்னா போலீஸ்காரங்க கேட்பாங்க... கேஸ் போடுவாங்க... தெருவில்தான் இத்தனை லைட் இருக்கே சாரு!'ன்னு சொன்னா... சைக்கிள் சக்கரத்தில் காற்றைப் பிடுங்கிவிட்டுட்டு, வெளியே இவ்ளோ காத்து இருக்கே!'ன்னு சொல்லுவாங்க. இப்போவெல்லாம் அப்படியா இருக்கு?!'
(சென்னை மெரீனா கடற்கரையில் இரு பெண்கள் பேசியது...)
இன்னுமா உன் பையனுக்கு பொருத்தமான பொண்ணு அமையலை?'
பையனுக்குப் பொருத்தமா அமைஞ்சி என்ன பண்றது? எனக்கு அனுசரணையா இருக்க வேண்டாமா?'
ஏ. விஜயபாரதி, சென்னை56.
யோசிக்கிறாங்கப்பா!
நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள்
சந்தேகங்களைச் சந்தேகப்படுங்கள்.
நெ. இராமகிருஷ்ணன்,சென்னை.
மைக்ரோ கதை
வீட்டில் முதியவர் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினார். அப்போது, அவர் தனது சட்டைப் பையை சோதித்த
போது, அதில் வைத்திருந்த நூறு ரூபாய் இல்லாததைக் கண்டார். உடனே வீட்டில் இருந்தோரிடம் அவர் கேட்டார்.
அப்போது வேலைக்காரி ஓடிவந்து, பெரியவரே... அது உங்களோட சட்டையா? நான் உங்க மகனோட சட்டைன்னு நினைச்சு எடுத்துட்டேன். இந்தாங்க நூறு ரூபாய்...' என்று கூறிக்கொண்டே முதிய
வரிடம் கொடுத்தார். வீட்டில் இருந்தவர்கள் அந்தப் பெரியவரின் மகனைப் பார்க்க, அவரும் தனது சட்டைப் பையைத் தேடத் தொடங்கிவிட்டார்.
வி.ரேவதி, தஞ்சாவூர்.
எஸ்.எம்.எஸ்.
சிரிப்பதைப் போன்று நடிக்க முடியும்.
ஆனால் நிம்மதியாய் இருப்பதைப் போல் நடிக்க முடியாது!
த. நாகராஜன், சிவகாசி.
அப்படீங்களா!
செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) கட்டுப்பாட்டில் இயங்கும் சாட்பாட்களின் செயல்
பாடுகள் முதலில் மக்களை வியக்க வைத்தாலும், பின்னர் அது பல்வேறு சர்ச்சைகளையே ஏற்படுத்துகின்றன.
அதில் தற்போது முன்னிலை வகிப்பது கூகுள் ஜெமினியின் நானோபனானா ஏஐ புகைப்பட மாற்று செயலியாகும்.
பயனாளர்கள் தங்களின் புகைப்படங்களை இதில் பதிவேற்றம் செய்தால்போதும், 3டி மாதிரி வடிவில் உடனடியாக அப்படியே மாற்றி அளித்துவிடுகிறது.
மனிதர்களை பொம்மை வடிவில் காண்பிக்கும் ஏஐ புகைப்படங்களுக்கு இணையத்தில் அமோக வரவேற்பு. பிரபலங்களின் படங்களை மட்டுமே ஏஐ உருவாக்கி வந்ததாலும், நானோ பனானா செயலி இலவசம் என்பதாலும், உலகம் முழுவதும் இணையவாசிகள் தங்களின் விதவிதமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து 3டி மாதிரியை உருவாக்கி வைரலாக்கினர். இதனால் அதிகப் பயன்பாட்டு செயலியில் சாட்ஜிபிடியை கூகுள் ஜெமினி முந்தியது.
இதற்காக கூகுள் ஜெமினி அல்லது கூகுள் ஏஐ செயலிக்குள் சென்று உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து கிரியேட் கமர்சியலைஸ்ட் பிகரீன்' என ஆங்கிலத்தில் கட்டளையிட்டால் போதும்.
இந்த சேவை அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து பெண்கள் தங்களின் புகைப்படங்களை பதிவிட்டு விதவிதமான புடவைகளில் காண்பிக்க அளிக்கும் கட்டளைகள் இணையத்தில் அதிகரித்துள்ளன. பெண்களின் புகைப்படங்கள் நீண்ட காலத்துக்கு இணையத்தில் இருப்பதும், அவர்கள் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடிப்பதும் பாதுகாப்பானதல்ல என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்தை அளவாகப் பயன்படுத்தினால் நன்று அளவை மீறினால் நஞ்சு.
அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.