முகப்பு
தினமணி கதிர்

மின் அடுப்புகளைப் பயன்படுத்துவோர்...

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால், காயில் அடுப்பு, ஹாட் பிளேட், இன்டக்ஷன் அடுப்பு, இன்ஃபிரா ரெட் அடுப்பு உள்ளிட்ட பலவிதமான அடுப்புகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 10:43 PM
பகிர்:

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால், காயில் அடுப்பு, ஹாட் பிளேட், இன்டக்ஷன் அடுப்பு, இன்ஃபிரா ரெட் அடுப்பு உள்ளிட்ட பலவிதமான அடுப்புகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இவர்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

இன்டக்ஷன் அடுப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், எவர்சில்வர் பாத்திரங்களை மட்டும் பயன்படுத்தலாம். இதர அடுப்புகளில் அனைத்து உலோகப் பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். இன்ஃபிரா ரெட் அடுப்பில் உலோகப் பாத்திரங்களுடன் கூடுதலாக மண்பாத்திரங்களையும் பயன்படுத்தலாம்.

மின்விளக்கு அல்லது மின்விசிறி இயங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் 0.75 மி.மீ. அல்லது 1 மி.மீ. வயர்கள் மின் அடுப்புகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவைத் தாங்காது. வயர் சூடாகி உருகி, 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், மின் அடுப்புக்காகத் தனி இணைப்பாக 2.5 மி.மீ. தடிமனுள்ள வயர்கள் தேவை. சாதாரண 5 ஆம்பியர் சாக்கெட்டில் மின் அடுப்பின் பிளக் செருகக் கூடாது. அதிக மின்சாரம் வருவதால் வெப்பம் அதிகமாகி உருகிவிடும். ஏ.சி. அல்லது பிரிட்ஜுக்குப் பயன்படுத்துவது போன்ற 16 ஆம்பியர் பவர் சாக்கெட் மற்றும் சுவிட்சைப் பொருத்த வேண்டும்.

Advertisement

 மின் அடுப்புகளுக்கு 2,000 வாட்ஸிலிருந்து 3,000 வாட்ஸ் வரை மின்சாரம் தேவைப்படும். அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தைத் தாங்கக் கூடிய பருமனான வயர்களும், சுவிட்சுகளும் அவசியம். வீட்டில் 'எர்த்' வசதி சரியாக இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். இல்லையென்றால், அடுப்பின் உலோகப் பாத்திரத்தை சமையல் செய்பவர் தப்பித் தவறி தொடும்போது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.

 ஒன்றுக்கும் மேற்பட்ட மின் அடுப்புகளை ஒரே மல்டி பிளக்கில் செருகவோ, அல்லது சாதாரண எக்ஸ்டென்ஷன் பாக்ஸ்களையோ மின் இணைப்புக்காகப் பயன்படுத்தவோ கூடாது.

மின் அடுப்புகளுக்கு மட்டுமல்லாமல், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், கிரைண்டர், டிஷ் வாஷர் போன்ற மின் சாதனங்களுக்கு எர்த் இணைப்புடன் இருக்கும் மூன்று 'பின்' சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

வீட்டுப் பயன்பாட்டுக்கு 'ஹாட் பிளேட்' அடுப்புடன் ஒப்பிடும்போது, இன்டக்ஷன் ஸ்டவ் அதன் மேம்பட்ட வேகம், ஆற்றல் திறன், பாதுகாப்பால் சிறந்தது. ஹாட் பிளேட் அடுப்பு பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைவிட குறைந்த மின்சாரம் இன்டக்ஷன் அடுப்புக்குப் போதுமானது.

இன்ஃப்ரா ரெட் அடுப்புடன் ஒப்பிடும்போது இன்டக்ஷன் அடுப்புகள் வீட்டுச் சமையலுக்குச் சிறந்தவை. இன்டக்ஷன் அடுப்புகள் 90%-95% ஆற்றல் திறன், நீரை சீக்கிரம் கொதிக்க வைக்கும் வேகம், சிறந்த பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாகும். சமையல் முடிந்ததும் இன்டக்ஷன் அடுப்பின் மேற்பரப்பு எளிதில் குளிர்ச்சி அடைந்துவிடும்.

இன்ஃப்ரா ரெட் அடுப்புகளில் களிமண், அலுமினியம், இரும்பு, கண்ணாடி உள்ளிட்ட அனைத்து வகையான பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். இவை குறைந்த செயல்திறன் (60%-70%) கொண்டவை. சூடாகவும், குளிரவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இன்ட க்ஷன் அடுப்பைவிட சற்று அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தும்.

இன்டக்ஷன் அடுப்பில் சமையல் செய்யும் போது சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரம் சூடாகாது. ஆனால், சமைக்கப்படும் உணவுப் பொருள் சூடாகும். வெந்துவிடும். இதர மின் அடுப்புகளில் சமையல் செய்யும்போது, பாத்திரத்தைத் தொட்டால் சுடும். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இன்டக்ஷன் அடுப்பு சமையலுக்கு உகந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments