தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 'வித் லவ்' திரைப்படம் கடந்த 6- ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

டெல்டா அசோக்

அபிஷனை வாழ்த்திய ரஜினி!

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 'வித் லவ்' திரைப்படம் கடந்த 6- ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். எம்.ஆர்.பி. நிறுவனமும், செளந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன.

படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உள்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினர். அப்போது அனஸ்வரா ராஜன், 'எம். ஆர். பி. நிறுவனத்தின் ஹாட்ரிக் வெற்றி இதிலும் தொடரணும். சென்னையில உனக்கொரு சகோதரி இருக்காங்கன்னு நினைச்சுக்கோன்னு செளந்தர்யா மேம் சொன்னது, நினைவுல இருக்கு. அந்த அன்பை எனக்கு எப்போதும் அவங்க கொடுத்திருக்காங்க. நான் வொர்க் பண்ணின க்யூட் இயக்குநர் இப்படத்தின் இயக்குநர் மதன்தான்.

என்னுடைய அம்மாவின் ஃபேவரிட்டும் அவர்தான். தமிழ் சினிமாவுக்குப் புதிய கதாநாயகனாக அபிஷன் கிடைக்கப் போறாரு. ஆன் ஸ்கிரீன்ல சத்யா - மோனிஷா ஜோடி வொர்க் ஆனதுக்கு, ஆஃப் ஸ்கிரீன்ல இருக்கிற ப்ரண்ட்ஷிப்தான் காரணம்' என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த், 'இந்த இடத்துல என்னுடைய முதல் நன்றியை சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்குச் சொல்லிக்கிறேன். இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முதல்ல ஓகே சொல்லிட்டேன். பிறகு வந்த விமர்சனங்கள் என்னைப் பாதித்தது. பிறகு ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் 'நீ நடி கண்ணா'னு சொன்னாரு. அந்த வார்த்தை என்னுடைய இன்செக்யூரிட்டியை உடைச்சது.

'டூரிஸ்ட் ஃபேமிலி' ரிலீஸூக்கு முன்னாடியே இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு இயக்குநர் மதன் கேட்டாரு. என்மேல வச்ச நம்பிக்கைக்கு நன்றி. 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்குப் பிறகு எனக்கு மரியாதை கிடைச்சது. அதுபோல, இரண்டு மடங்கு அதிகமாக இயக்குநர் மதனுக்கும் மரியாதை கிடைக்கும். என்னைப் பொறாமைப்பட வைப்பது மாதிரியான காட்சிகள் படத்தின் இரண்டாம் பாதியில இருக்கு.

படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னுடைய மனைவி அகிலா அபிஷன் ஜீவிந்துக்கு நன்றி. நான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை இயக்கி ஃபேமஸ் ஆனதைவிட, அவங்க புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம். நான் என்ன தவறுகள் பண்ணினாலும், அது நான் செய்த பாவங்களின் பிரதிபலிப்புனு நினைக்கிறேன். எனக்கு என்ன நல்லது நடந்தாலும் அதுக்குக் காரணம் அகிலாதான்' எனப் பேசினார்.

காதலர் தினத்தில் ட்ரீம் கேர்ள்!

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர்.பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும், நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் காதலர் தினத்தன்று படம் திரைக்கு வரவுள்ளது.

படம் பற்றி இயக்குநர் எம்.ஆர்.பாரதி கூறுகையில், 'இது ஒரு காதல் கதை. கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு. இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள்.

அவர்களுக்குள் காதல் வருகிறது. கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது. அது சில மாயங்களைச் செய்கிறது. அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வது தான் 'ட்ரீம் கேர்ள்' படம்.

காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்தனைக் கருத்துகள் உலவினாலும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் தாஜ்மஹால் என்ற இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்கமுடியும்.

காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது. கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம். ஒரு கனவை துரத்தும் காதலனின் வாழ்க்கை' என்றார்.

குமுளி மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜீவா!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஃபேமிலி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றிவிழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜீவா, 'நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாக குமுளியில் ஒரு குடும்பமாகத் தங்கி இந்தப் படத்தை எடுத்தோம். அங்கிருந்த மக்கள் எங்களுக்காகக் கிடா வெட்டிச் சாமி கும்பிட்டு, இந்தப் படம் 'விஸ்வரூப வெற்றி' அடையும் என்று வாழ்த்தினார்கள். இந்த வெற்றிக்கு அந்த மக்களின் அன்பும் ஒரு முக்கியக் காரணம்.

இயக்குநர் நிதேஷ் சகாதேவ்தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. ஒரு நடிகராக எனக்குத் தமிழில் ஒரு பெரிய வெற்றியை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் நிதேஷ் சாத்தியமாக்கியுள்ளார்.

எனது தந்தை ஆர்.பி. சௌத்ரி 99 படங்கள் தயாரித்துள்ளார். ஆனால், இதுவரை அவருக்கு யாரும் பாராட்டு விழா நடத்தியதில்லை. தயாரிப்பாளர் கண்ணன் ரவி முன்வந்து, தமிழ்ச் சங்கம் மூலமாக எனது தந்தைக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவை நடத்தினார். தந்தையின் ஆசிர்வாதமே இந்த வெற்றிக்குக் காரணம்.

வி.டி.வி. கணேஷ் தான் இந்தக் கதையை முதலில் சிபாரிசு செய்தார். தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றோம். கதை பிடித்திருந்ததால், 'படம் எப்போது வேண்டுமானாலும் பண்ணுங்கள்' என்று கூறி, அப்போதே அட்வான்ஸ் கொடுத்தார். அந்த நம்பிக்கைதான் இன்று வெற்றியாக மாறியுள்ளது. இந்தத் தருணங்கள் இனிமையான நினைவுகளாக மாறியுள்ளன' என நெகிழ்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்னதாய் ஓர் அரண்மனை

இளைஞர்களிடம் வாசிப்பு அதிகமாகிவிட்டது

தமிழக மருத்துவத் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

நதிநீர் இணைப்பின் முதல்வன்...

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT