FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் நூறு சாமி..! முதல்பார்வை போஸ்டர் அப்டேட்!

இயக்குநர் சசியின் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் நடித்துள்ள புதிய படம் குறித்து...

Updated On : 15 மார்ச் 2026, 11:52 am IST
நூறு சாமி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / விஜய் ஆண்டனி.
பகிர்:

இயக்குநர் சசியுடன் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்து நூறு சாமி எனும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (மார்ச்.16) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் இணைந்து கடந்த 2016ல் பிச்சைக்காரன் படம் வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் படத்துக்குப் பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளார்கள். நூறுசாமி எனும் படத்தினை விஜய் ஆண்டணியே தயாரித்து நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகைகள் ஸ்வாசிகா, லிஜோமோல் நடித்துள்ளார்கள். இவர்களுடன் கருணாஸ், பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் கோடையை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் சசியும் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

summary

Actor Vijay Antony is teaming up with director Sasi once again for a new film titled Noor Sami.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments