FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது... அப்பா குட்டியைப் பாராட்டிய விஜய் ஆண்டனி!

அப்பா குட்டி திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி...

27 வினாடிகள் முன்பு
விஜய் ஆண்டனி
பகிர்:

அப்பா குட்டி திரைப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு உருவான அப்பா குட்டி திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை மு. மாறன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

விஜய் ஆண்டனி கதாநாயகனாகவூம் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன் முன்வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “இயக்குநர் மு. மாறன் கடந்த 10 –15 ஆண்டுகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றி, இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறார். இதற்கு முன்பு மூன்று படங்களை இயக்கியுள்ள அவர், இந்தப் படத்தின் மூலம் இன்னும் பெரிய அங்கீகாரத்தைப் பெறுவார் என நம்புகிறேன். மிகவும் நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அவருக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான வெற்றியைத் தேடித்தரும். அப்பா குட்டி தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்த பைஜாவுக்கும், தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் நன்றி. விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

ப்ரீத்தி அஸ்ரானி இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. காதல் கதாபாத்திரத்தில் நடிப்பதைவிட, திருமணமான ஆணைக் காதலிக்கும் உணர்வுகளையும் காதலையும் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்துவது எளிதானதல்ல. அதை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றுவோம். அதேபோல், இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, லாரா மேடையில் பேசியது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து மகிழலாம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொருவரும் தங்களது அப்பாவுக்கு ஒரு போன் செய்து பேசுவீர்கள். அந்த அளவுக்கு தந்தை – மகள் உறவை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறோம். படத்தில் இடம்பெற்றுள்ள ‘அப்பாவைப் போல இங்கே யாரிருக்கா?’ பாடலும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். பாடலாசிரியர் ஏகாதசி, அருண்பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம். நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Vijay Antony has spoken about the film 'Appa Kutty'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.