FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிச்சைக்காரன் - 3 அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

பிச்சைக்காரன் - 3 திரைப்படத்தின் அப்டேட்....

33 வினாடிகள் முன்பு
விஜய் ஆண்டனி
பகிர்:

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் - 3 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement

Advertisement

தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி எடுத்தார். ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது, அப்பா குட்டி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன் திரைப்படத்திலிருந்து ரசிகர்கள் எனக்கு வழங்கிவரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. பிச்சைக்காரன் 3 திரைப்படம் உருவாகிறது. அதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இப்படம் அடுத்தாண்டு ஆயுத பூஜை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Vijay Antony has spoken about the film Pichaikkaran 3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.