அப்பாவின் அன்பையும் உழைப்பையும்... மகள் பேச்சால் நெகிழ்ந்த விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனியின் மகள் பேசியது கவனம் பெற்றுள்ளது...
அப்பா குட்டி திரைப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா பேசியது கவனம் பெற்றுள்ளது.
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிணைப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான உறவை மையமாகக் கொண்டு உருவான அப்பா குட்டி திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை மு. மாறன் எழுதி இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
விஜய் ஆண்டனி கதாநாயகனாகவூம் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் முன்வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டனியின் மகள் லாரா, “இந்தத் திரைப்படத்திற்காக என்னுடைய அப்பா இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தந்தை தனது குழந்தை மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றிப் பேசும் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் அனைவரும் தங்களுடைய அப்பாவின் அன்பையும் உழைப்பையும் இன்னும் அதிகமாகப் புரிந்துகொண்டு அவர்களைப் பாராட்டுவார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் படம் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. அனைவரும் படத்தைப் பார்க்க வேண்டும். நன்றி.” எனக் கூறியுள்ளார்.
லாராவின் பேச்சைக் கேட்ட விஜய் ஆண்டனி என் மகள் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ச்சியாகக் கூறியது கவனம் பெற்றுள்ளது.