முகப்பு
தினமணி கதிர்

'பொற்'காலம்...

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி தேவஸ்தானத்தின் கீழ்ப்புறம் உள்ள பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, உள்ளே இருப்பவற்றைக் கண்டு உலகமக்களே வியப்பில் ஆழ்ந்தனர்.

Updated On : 1 மார்ச், 2026 at 4:12 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:40 PM

முனைவர் ஜி.குமார்

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி தேவஸ்தானத்தின் கீழ்ப்புறம் உள்ள பெட்டகத்தை 2011-ஆம் ஆண்டு அரசுத் துறையினர் திறந்து பார்த்தபோது, உள்ளே இருப்பவற்றைக் கண்டு உலகமக்களே வியப்பில் ஆழ்ந்தனர்.

சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க நகைகள், கிரீடங்கள், பொற்காசுகள் இருந்தன. அந்தப் பொற்காசுகளில் சிலவற்றில் ரோமாபுரி அரசர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இதன்வாயிலாக கி.மு. 200-ஆம் ஆண்டு முதல் கி.பி. 200-ஆம் ஆண்டுவரை நம் நாடு உலகின் மிக வளமான நாடாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.

Advertisement

இந்தியாவில் எப்படி ரோமாபுரி பெருமளவு பொற்காசுகள் வந்தன என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, அவற்றின் கால அளவும் பல நூற்றாண்டுகளுக்கு நீண்டிருந்ததை அறிந்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் வர்த்தகம் பெரிதாக விரிவடைந்திருந்தது. ரோமப் பேரரசின் மக்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை கேரளத்தின் மிளகு, ஏலக்காய் போன்ற அரிதான பொருள்களுக்கு அடிமையாகியிருந்தனர். மிளகு அப்போதெல்லாம் தங்கம், வெள்ளிக்குச் சமமாகக் கருதப்பட்டதால், வர்த்தகம் செழித்தது.

ராணுவம், கட்டுமானம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளிலும் செழித்து விளங்கி, மேற்கத்திய உலகின் மிகப் பெரிய பேரரசாகக் கருதப்பட்ட ரோமாபுரியோ நம் நாட்டுக்குப் பண்டமாற்று முறையில் தங்கத்தையே அளித்து வந்தது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:40 PM

இவ்வாறாக, பொற்கிரீடங்கள், ஆபரணங்கள், பொற்காசுகள் ஆகியவற்றைச் சுமந்து வந்த கப்பல்கள் மலபார் கரையில் அவற்றை அளித்துவிட்டு, கேரளத்தில் இருந்து மிளகு, ஏலம், கிராம்பு, லவங்கப் பட்டை, பட்டு, பருத்தி ஆடைகளை ஏற்றிக் கொண்டு தலைநகர் அலெக்ஸாண்டிரியாவுக்குத் திரும்பின. அப்படி வந்த தங்கம் இன்று இங்கேயே தங்கிவிட்டது.

தங்கச் சேமிப்பானது ரோமாபுரி அரசவையில் நம் நாட்டுக்கான இறக்குமதியைக் குறைக்கும் விவாதமும் நடைபெற்றுள்ளதையும் சரித்திரங்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால், அது நடைபெறவில்லை.

இதை நிரூபிக்கும் வகையில் காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் லட்சக்கணக்கான பொற்காசுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என புதைபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தினர் கூறுகின்றனர். அந்தப் பொற்காசுகளில் கீறல், வெட்டுகள் போன்ற சிதைவுகளும் காணப்பட்டன. இந்திய வணிகர்கள் அந்தக் காசுகளை சோதித்து எவ்வளவு தங்கம், எவ்வளவு வெள்ளி, அல்லது செம்பு கலப்பு போன்றவற்றை அறியும் ஆற்றல் பெற்றிருந்துள்ளனர்.

பத்மநாப சுவாமி தேவஸ்தானத்தில் காணப்பட்ட பொற்காசுகளில் இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட தேசங்களின் காசுகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.