சிரி... சிரி...
அந்த ஹைடெக் திருமணத்தில் அவர் மட்டும் இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறாரே, ஏன்?
'அந்த ஹைடெக் திருமணத்தில் அவர் மட்டும் இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறாரே, ஏன்?'
'அவருக்கு இன்னும் ஓ.டி.பி.
நம்பர் மாட்ச் ஆகவில்லையாம்!'
Advertisement
-மஞ்சுதேவன், பெங்களூரு.
----------------------------------------------------------------------------
'அந்த காக்கா வெறும் சப்பாத்தி மட்டும்தான் சாப்பிடுமா, ஏன்?'
'வடநாட்டில் இருந்து வந்திருக்காம்!'
-எம்.பி.தினேஷ், கோவை - 25.
----------------------------------------------------------------------------
'உன்கிட்ட பச்சைப் பயறு சுண்டல் செய்யச் சொன்னது தப்பாப் போச்சு!'
'என்ன சொல்றீங்க?'
'வேகாம பச்சையா வந்து கொண்டு தந்திட்டியே!'
-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
----------------------------------------------------------------------------
'நீங்க சொல்ற கதையை படமா எடுத்தா ஓடுமா?'
'ஏற்கெனவே கொரியாவுல ஓடியிருக்கே!'
-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.
----------------------------------------------------------------------------
'டாக்டர், எனக்கு எல்லாம் டபுள் டபுளா தெரியுது!'
'சரி... வாயை ஊதுங்க!'
----------------------------------------------------------------------------
'நீ எதுக்கு திருடப் போகும்போது உன்கூட டூப்ளிகேட் சாவி பண்ற ஆளைக் கூட்டிக்கிட்டுப் போறே?'
'நல்ல பூட்டையெல்லாம் உடைக்க எனக்கு மனசு வராது, சார்!'
-தீபிகா சாரதி, சென்னை-5.
----------------------------------------------------------------------------
'நாம எடுக்கப்போகும் புதிய படத்துக்கு மக்கள் வரிசையில் நிற்கணும்... அப்படி ஒரு தலைப்பு வைக்கணும்.'
'அப்ப... 'சிலிண்டர்'னு வைக்கலாம்!'
----------------------------------------------------------------------------
'நம் தலைவரை வெளிநாட்டில் பிறந்த என் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு...'
'ஏன், என்னாச்சு?'
'பெட்ரோல், டீசல்னு பெயர் வைச்சிட்டாரு!'
எஸ்.சிவஞானம், வாணியம்பாடி.
----------------------------------------------------------------------------
'இருக்கும் இடத்துக்கேற்ற மாதிரி மன்னர் சாப்பிடுறார்...'
'என்ன சொல்றே?'
'பதுங்குக் குழியில் இருந்துட்டு 'குழி'ப் பணியாரம் சாப்பிடுறாரே!'
----------------------------------------------------------------------------
'மயிர்க்கூச்செறியும் படமுன்னு போய்ப் பார்த்தது தப்பாச்சுன்னு எதைவச்சு சொல்றே?'
'எல்லா 'முடி'யும் கொட்டி, தலை வழுக்கையாயிடுச்சு!'
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
----------------------------------------------------------------------------
'உங்க படம் ரொம்ப பெரிய படம்னு சொன்னீங்க... இது குறும்படமா இருக்கே?'
'சென்சாரில் வெட்டினது போக இவ்வளவுதான் கிடைச்சது!'
----------------------------------------------------------------------------
'இளவரசரின் கல்யாணத்துல மொய் எழுதுறவங்க பக்கத்துல நிற்குற ரெண்டு பேர் யாரு?'
'மொய்காப்பாளர்கள்!'
----------------------------------------------------------------------------
'நான் வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டேன், தெரியுமா?'
'அதான் உன் வண்டியிலே 'அத்தை-மாமா துணை'ன்னு எழுதியிருக்கியா?'
இந்து குமரப்பன், விழுப்புரம்.
----------------------------------------------------------------------------
'பெண் பார்க்க வந்தா காபி மட்டும் தானா..?'
'பையனைப் பிடிச்சிருக்குன்னு பொண்ணு சொல்லட்டும்... உடனே ஸ்வீட், காரம் வரும்.'
பர்வதவர்த்தினி, பம்மல்.