தினமணி கொண்டாட்டம்

செத்த வண்டுக்கு உயிர் கொடுத்த கால்டுவெல்!

DIN

அயர்லாந்து நாட்டிலிருந்து வந்த கால்டுவெல் தமிழ் படித்து அறிஞராகி திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய பேரறிஞர். ஒருசமயம் புதிய வெளிநாட்டு கைக்கடிகாரத்தை வழியில் தவறவிட்டார். பாதையில் கண்ட இரண்டு கிராமத்து வாலிபர்கள் (அவர்கள் இதுவரை இதுபோன்ற கைக்கடிகாரம் பார்த்ததில்லை) அதன் டிக் டிக் ஒலி அவர்களுக்குப் புதிராக இருந்தது. அதை ஒரு வண்டு என நினைத்தார்கள். இரண்டு குச்சிகளை எடுத்து அதனால் அதைத் தூக்கி வீட்டிற்குக் கொண்டு சென்று ஒரு பானையில் போட்டு வைத்தனர். 
மறுநாள் காலை பார்த்தபோது டிக் டிக் சத்தம் நின்று போனது. வண்டு செத்துவிட்டது என எண்ணி அதை கால்டுவெல் அவர்களிடம் கொண்டு வந்து காட்டினார்கள். அவர் சாவி தந்ததும் டிக் டிக் ஓசை. அவர்கள் வண்டுக்கு உயிர் கொடுத்ததாக அதிசயப்பட்டனர். பின் கால்டுவெல் அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
எழிலமுதன் நூலிலிருந்து 
- கோ. குறளமுதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT