தினமணி கொண்டாட்டம்

புதுமுக ஹீரோவுக்கு தைரியம் தந்த ரம்யா நம்பீசன்

DIN

சீரியல் பிரபலம் கவின் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "நட்புன்னா என்னென்னு தெரியுமா'. கவின் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ராஜூ, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் அரவிந்தன் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து பேசும் போது... ""நட்பை அடிப்படையாக கொண்ட திரைக்கதை இது. நட்பைப் பற்றி இதுவரை பல படங்கள் வந்த போதிலும், இது தனித்துவமாக இருக்கும் அளவுக்கு கதை தயார் செய்யப்பட்டுள்ளது. மூன்று இணைபிரியா நண்பர்கள். அவர்களுக்குள் ஏற்படும் காதல், மோதல், அன்பு, பிரிவு, கண்ணீர், காமெடி பற்றிய திரைக்கதை. "சரவணன் மீனாட்சி' பிரபலம் கவின் இதன் மூலம் சினிமாவுக்கு வருகிறார். அவருக்கு முதல் படம் என்பதால், சீனியர் நடிகையான ரம்யா நம்பீசனுடன் காதல் காட்சிகளில் நடிப்பதற்கு கொஞ்சம் தயங்கினார். சீரியலில் நடிப்பது போன்றே விலகி நின்று நடித்தார். காதல் காட்சிகளில் கொஞ்சம்கூட நெருக்கம் காட்டவில்லை. இதன் பின் ரம்யாவிடம் ஹீரோவின் தயக்கத்தை எடுத்துக் கூறினேன். அதை புரிந்துக் கொண்ட ரம்யா, கவினுக்கு தைரியம் சொல்லி நெருக்கமாக நடிக்க ஒத்துழைப்பு கொடுத்தார்'' என்றார் இயக்குநர். படப்பிடிப்பு சென்னையில் நடந்துள்ளது. தரண் இசையமைத்துள்ளார். இப்படத்துக்காக சிம்பு } ரம்யா நம்பீசன் இணைந்து பாடல் பாடியுள்ளனர். ஏப்ரல் மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT