தினமணி கொண்டாட்டம்

பெண் இயக்குநர்கள் போராட்டம்

DIN

"அழகி', "கன்னத்தில் முத்தமிட்டால்', "நீர்பறவை' படங்களில் நடித்திருப்பவர் நந்திதா தாஸ். இவர் "ஃபிராக்', "இன்டிபென்ஸ் ஆப் ஃப்ரீடம்', "மேன்டோ' என 3 படங்கள் இயக்கி இருக்கிறார். பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்க சென்றிருக்கிறார் நந்திதா. அதேபோல் ஹாலிவுட் உள்ளிட்ட வேற்று மொழி படத்தை இயக்கிய பெண் இயக்குநர்கள் பலரும் அங்கு வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். கேன்ஸ் பட விழாவில் ஆண், பெண் இயக்குநர்கள் பாகுபாடு காட்டப்படுகிறது. பெண் இயக்குநர்கள் இயக்கிய 82 படங்கள் திரையிடப்படுகின்றன. ஆனால் ஆண் இயக்குநர்கள் இயக்கிய 1,645 படங்கள் திரையிடப்படுகின்றன. அதன்படி பெண் இயக்குநர்கள் படங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
 இதுபற்றி பெண் இயக்குநர்கள் தரப்பில் கூறும்போது: "எங்களது போராட்டத்தால் மற்றவர்கள் முகமூடி கிழிந்திருக்கிறது. இதனால் அவர்கள் பயத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுவொரு பெரிய மாற்றம்தான். இந்த போராட்டத்தையடுத்தாவது பெண் இயக்குநர்கள் படங்கள் அதிகம் திரையிடப்பட வேண்டும் என்பது பற்றிய விவாதத்தை தொடங்கி கேன்ஸ் பட குழுவினர் நல்ல முடிவெடுப்பார்கள் என நம்புகிறோம்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT