தினமணி கொண்டாட்டம்

எதிலும் நடிப்பேன்

DIN

"நட்பே துணை' படத்தின் மூலம் பளீச் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் அஸ்வின். ஹாக்கி வீரர் ஆசிப் என்ற கதாபாத்திரத்தில் பரவலான பாராட்டுக்களைப் பெற்றவர். ""சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து விட்டு ஹில் பிரீஸ் ஹோட்டல் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றினேன். கை நிறைய சம்பளம். கௌரவமான வேலை என்று இருந்தவன். நடனம், உடற்பயிற்சி என பலவற்றில் ஆர்வம். அந்த நேரத்தில் "யானும் தீயவன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டது. அதனால் படத்திற்கு வெற்றிக் கிடைக்காமல் போய் விட்டது. இப்போது "பஞ்சாட்சரம்' படத்தில் நடிக்கிறேன். கூத்துப்பட்டறை பயிற்சிகள் சினிமாவுக்குப் பெரிதும் கைக் கொடுக்கின்றன. ஆதி என்னை அந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி.
 எனக்கு இது தான் வேண்டும். இதில் தான் நடிப்பேன் என்று இல்லை...எதிலும் தனித்திறனை காட்டுவேன். நிச்சயம் மதிப்புமிக்க இடத்துக்கு வருவேன் என்ற நம்பிக்கையில் உழைக்கிறேன்'' என்றார் அஸ்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT