தினமணி கொண்டாட்டம்

விளம்பரம்.. குறும்படம்... சினிமா

DIN

தமிழ்த் திரை இசையில் சமீபமாக கவனிக்கத்தக்க ஆளுமையாக வளர்ந்து வருகிறார் விஷால் சந்திரசேகர். அவரது பயணம் குறித்து பேசும் போது....
 "விளம்பரப் படங்களின் மூலம் தான் என் இசை பயணம் தொடங்கியது. இதுவரை 250 விளம்பரப் படங்களுக்கும், சுமார் 450 குறும்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட 20 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். எனது முதல் படமான "இனம்' படத்தின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. டொரன்டோ திரைப்பட விழாவிற்கு நியமனம் செய்யப்பட்டது. அடுத்தது "குற்றம் 23' படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
 "சங்கிலி புங்கிலி கதவ தொற', "குற்றம் 23', "ரங்கூன்' மற்றும் சமீபத்தில் வெளியான "ஜாக்பாட்' போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற்றது.ராதாமோகன் இயக்கத்தில் "பிருந்தாவனம்' படத்தில் பணியாற்றினேன். அப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.
 விஜய் டிவியில் "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் முதலில் திரையிடப்பட்ட படமே நான் இசையமைத்த படம்தான். அந்த சீசனில் 17 குறும்படங்களுக்குப் பணியாற்றினேன். சீசன்-1 இல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் பெற்றேன். சீசன்-2 இல் மூன்று குறும்படங்களுக்கு இசையமைத்து மூன்றுக்குமே விருது பெற்றேன். அதேபோல் சீசன்-3 இல் விருதுபெற்றேன். அது எனக்குப் பெரும் தூண்டுதலாக இருந்தது தனிப்பட்ட முறையில் என்னை ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி'' என்கிறார் விஷால் சந்திரசேகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT