தினமணி கொண்டாட்டம்

தங்க நிறத்தில் உடை

தினமணி

1980-ஆம் ஆண்டு காலக் கட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் கோலோச்சிய நட்சத்திரங்கள் ஆண்டு தோறும் சந்திப்பதை வழக்காக வைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தச் சந்திப்பு, இந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தாண்டு சீரஞ்சிவி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி - கமல் கலந்து கொள்ளவில்லை.
 ரஜினிக்குச் சொந்தப் பணிகள் இருந்ததாலும், கமல் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.இந்தச் சந்திப்பில் அனைத்து நட்சத்திரங்களும் தங்க நிறத்தில் உடையணிந்து வந்திருந்தனர். அந்தக் காலக் கட்ட நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். ஆடல், பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறுசிறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மோகன்லால், நாகார்ஜுனா, கே.பாக்யராஜ், பிரபு, ஜெயராம், சுரேஷ், ரகுமான், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, சுமன், ஷோபனா, நதியா, ராதா, அமலா, ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்தப்புகைப்படங்களைத் தங்களது இணைய தளப் பக்கங்களில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT